மணிரத்தனம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் மாநாடு. இந்த படம் ஒரு அரசியல் கதையை மையமாக வைத்தும், திரில்லர் காட்சிகளை கொண்டதாகவும் இருக்கும் என தகவல்கள் தெரியவந்தன. இந்த படத்தின் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட நிலையில் இந்த படத்தில் இருந்து சிம்பு திடீரென்று வெளியேறி விட்டதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார். மேலும், இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய ஃபேஸ்புக்கில் மாநாடு படம் சிம்பு உடன் கைவிடப்பட்டது என்றும் தெரிவித்து இருந்தார். அதோடு இயக்குனர் வெங்கட் பிரபுவும் இந்த படம் கைவிடபட்டு உள்ளதாக ட்வீட் செய்து உள்ளார். சிம்பு அவர்கள் “மப்ஃடி , மகா” ஆகிய இரு படங்களில் கௌரவ வேடங்களில் நடித்து வருகிறார் என்றும், இந்த சமயத்தில் தான் மாநாடு படத்தின் பிரச்சனை எரிமலை போல் வெடித்தது என்றும் கூறப்படுகிறது.

பின் சிம்பு நடிப்பதாக இருந்த ‘மாநாடு’படம் பிரச்சனை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதன் பின் மாநாடு படம் இல்லை என்றால் என்ன, சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் மகா மாநாடு என்ற தலைப்பில் சிம்பு ஹீரோவாக படம் நடிக்கிறாராம். இந்த படத்தை சிம்புவின் தந்தை டி.ஆர் இயக்குகிறார் என்றும் தகவல்கள் வந்தது. இந்த படத்தை ஐந்து மொழிகளில் உருவாக்க போகிறார் என்றும் இந்த படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்க உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். அதுவும் இந்த மகா மாநாடு படம் மிக பெரிய பொருட்செலவில் எடுக்கப்படுவதாக தகவல்கள் வந்தது. இப்படி சிம்புவும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் மாற்றி மாற்றி வாக்குவாதங்களில் ஈடுபட்டு கொண்டு வந்திருந்தனர். பின் இந்த பிரச்சனை தயாரிப்பாளர் சங்கத்துக்கு போனது. ஒரு வழியாக இந்த பிரச்சினையை தீர்ந்தது.

Advertisement

இந்நிலையில் மாநாடு படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் வெளியிட்டு உள்ளார். 2018 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு படம் உருவாகிறது என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்கள். பின் 2019 ஆம் ஆண்டின் கோடை விடுமுறைக்கு இந்த படம் திரைக்கு வரும் என்றும் சொல்லி இருந்தார்கள். ஆனால், இந்த படத்தில் ஏகப்பட்ட பிரச்சினையால் படப்பிடிப்பு தொடங்கவில்லை. ஒரு வழியாக கடந்த ஆண்டு இறுதியில் நடிகர் சிம்பு மாநாடு படத்தில் நடிக்க தயாராக இருப்பதாகவும், படப்பிடிப்புக்கு சரியாக வந்து ஒத்துழைப்பு அளிப்பதாகவும் உத்தரவாதம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாநாடு படம் மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த மாநாடு படத்தின் அடுத்தடுத்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். அதன்படி மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர்களுடன் படத்தில் நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குனர் பாரதிராஜா, நடிகர் பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரவீன் இந்த படத்தின் பணிகளை மேற்கொள்வார் என்றும் தெரியவந்துள்ளது. படத்தில் பணியாற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து அடுத்தடுத்து வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்கள். மேலும், இன்னும் இரண்டு நாட்களில் ஓரு சர்ப்ரைஸ் காத்து கொண்டு இருக்கிறது என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதோடு வெங்கட் பிரபு அவர்கள் பேசும் வீடியோ ஒன்றையும் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் கூறியது, இந்த படத்தில் சிம்பு அவர்கள் முதன் முதலாக முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அவருடைய பெயரை ரசிகர்கள் தேர்வு செய்யலாம். ரசிகர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பப்படும் பெயர்களில் இருந்து ஒரு பெயரை தான் சிம்புவுக்கு வைக்கப்படும். அந்த பெயரை சிம்புவின் பிறந்த நாளில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் . இந்த பெயரை வையுங்கள் என்று பல்வேறு தலைவரின் பெயர்களை சிபாரிசு செய்யும் ரசிகர்கள்.

Advertisement
Advertisement