தனது அம்மா பரிசாக கொடுத்த காரில் சுற்றிய சிம்பு.கூட இருக்கும் பையன் யார் தெரியுமா ? வீடியோ இதோ.

0
1092
simbu
- Advertisement -

சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருவது பலரும் அறிந்த ஒன்று. இந்த தொடங்கப்பட்ட சிறுது மாதத்திலேயே இந்த படம் கைவிடப்பட்டது என்று அறிவித்திருந்தார்கள். மேலும், இந்த படத்திற்கு கூடிய விரைவில் நடிகரை தேர்ந்தெடுத்து படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார் தயாரிப்பாளர்.பின்னர் பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர் சிம்பு, சபரி மலைக்கு சென்ற வந்த பின்னர் இந்த படம் மீண்டும் துவங்கியது. அதுமட்டுமல்லாது இடையில் கிடைத்த கேப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்து கொடுத்தார். பின்னர் அதே வேகத்தில் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிம்பு.

-விளம்பரம்-
Image

இப்படி ஒரு நிலையில் ஒயாமல் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருந்த வேலையில் நடிகர் சிலம்பரசனின் தாய் திருமதி உஷா ராஜேந்தர் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்து மகிழ்வித்தார். நீண்ட நாளாக நடிகர் சிலம்பரசன் டி.ஆர் விருப்பப்பட்ட காரை அன்பு பரிசாக தனது மகனுக்கு அளித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் நடிகர் சிம்பு தனது அம்மா பரிசாக கொடுத்த மினி கூப்பர் காரில் ஒரு சிறுவனுடன் சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த குழந்தை வேறு யாரும் இல்லை, சிம்புவின் தங்கை மகன் தான்.

- Advertisement -

சிம்புவிற்கு இலக்கியா என்ற தங்கையும் இருக்கிறார். அதிலும் அவரது தங்கை என்றால் சிம்புவிற்கு மிகவும் பிடிக்கும் என்பது பலரும் அறிந்த ஒன்று. எப்போதும் தனது ரசிகர்கள் தான் எனக்கு மிக பெரிய பலம் என்று எப்போதும் கூறும் சிம்பு . சில ஆண்டுகளுக்கு மின்னார் விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது தனது வாழ்வில் நடந்த பல சோகமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்ட சிம்பு. ரசிகர்களுக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த நபர் யார் என்றால் எனது சகோதரி இலக்கியாவின் மகன் தான் என்று மிகவும் உணர்ச்சிகரமாக தெரிவித்திருந்தார்.

சிம்புவின் தங்கை இலக்கியா கடந்த பிப்ரவரி 2014 லில் அபிலேஷ் என்ற நபரை திருமனம் செய்து கொண்டார்.பின்னர் கடந்த 2017 ஆண்டு மார்ச் ல் 23 ஆம் தேதி இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சிம்பு தனது தங்கையின் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதே போல தனது அம்மா பரிசாக கொடுத்த புதிய காரில் தனது சகோதரி மகனுடன் ஊர் சுற்றியும் உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement