ஒருதன் கஷ்டப்பட்டு முன்னேற கூடாதே, சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக சிம்பு.

0
536
Str
- Advertisement -

சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக சிம்பு பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. நீண்ட இடைவெளிக்கு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து தற்போது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தில் சிம்புவுடன், ராதிகா, சித்தி இத்னானி படத்தில் பல நடிகர்கள் நடித்து இருக்கிறர்கள். இந்த படத்தை ஐசரி கனேசன் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறது.

- Advertisement -

நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. தற்போது பத்து தல என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து சிம்பு பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, பல வருடங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் அவர்கள் டிவியில் பணியாற்றியிருந்த போது நடிகர்கள் எல்லாம் கலாய்த்து பேசி இருந்தார்.

prince

அதில் சிம்பு குறித்தும் அவர் பேசியிருந்தார். அதை சோசியல் மீடியாவில் வைரல் ஆகியிருந்தது. அது குறித்து சிம்புவே சில வருடங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர், சிவகார்த்திகேயன் உழைத்து அந்த இடத்திற்கு வந்திருக்கிறார். அவர் வெற்றியில் எனக்கும் சந்தோஷம். நானே போன் செய்து பாராட்டினேன். உங்கள் சண்டையில் என்னை இழுக்காதீர்கள் என்று பேசி இருந்தார். இப்படி சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக சிம்பு பேசியிருந்த பழைய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் கலக்கி கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்திருந்த சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருந்தது. ஆனால், இந்த படம் கலவையான விமர்சனத்தை தான் பெற்றிருக்கிறது.

simbu

இதனை அடுத்து சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படம் ஏலியன் சம்மந்தம் பட்ட படம் என்று கூறப்படுகிறது. அதேபோல் கமல் தயாரிப்பில் உருவாகி வரும் படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

Advertisement