மணிரத்னம் படத்தில் இணைய போகும் சிம்பு, அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி.

சிம்பு மீதான சர்ச்சைகள் அதிகரித்துள்ள நிலையில் தற்போது சிம்புவின் அடுத்த படத்திற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. இதில் செம்ம காம்போ பேக் என்னவென்றால், சிம்புவுடன் தனிஒருவன் ‘அரவிந்த்சாமி’ நடிக்கவுள்ளார்.

simbu

இந்த படத்தில் சிம்புவிற்கு அண்ணனாக நடிக்க இருக்கிறார் அரவிந்த்சாமி. மேலும், சிம்பு மற்றும் அரவிந்த்சாமி என இருவரும் இந்த படத்தில் மாஸ் கேங்ஸ்டர்கள் ஆவர். இவர்களை பிடிக்க போலீசாக வரும் நடிகர் தான் செம்ம சர்ப்ரைஸ் பேக்.

Aravind swamy

இந்த எலி – பூனை ஆட்டத்தில், பூனையாக இரண்டு ரவுடிகளையும் பிடிக்க வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ஆம், இருவரையும் பிடிக்க வரும் போலீஸ் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். எப்படி பார்த்தாலும் இந்த மூன்று மணிரதம் இயக்கத்தில் நடிக்க இருப்பது செம்ம ஜோராக இருக்கும் என்பதில் ஐயமில்லை.