வீட்டின் முன்பு குவிந்த ரசிகர் கூட்டம். சிம்பு போட்ட ஆட்டம். வீடியோவை பகரிந்த சிம்பு சிஸ்டர்.

By Rajkumar · 3/2/2020

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஒரு காலத்தில் இளைய நடிகர்களில் கொடி கட்டி வந்த சிம்பு. பின்னர் பல பிரேச்சனைகளால் பல வருடங்களாக சினிமா துறையில் பட வாய்ப்புகள் எதுவுமின்றி அனைவராலும் கைவிடபட்டர்.நீண்ட இடைவெளிக்கு பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் சினிமாவில் தான் இழந்த இடத்தை மீண்டும் பிடித்தார். ஆனால் அதற்கு பிறகு AAA என்ற படத்தின் மூலம் மீண்டும் தோல்வியின் விளிம்பிற்கு சென்றுவிட்டார்.

https://twitter.com/ELAKKS/status/1224049164725538816

அதன் பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'செக்க சிவந்த வானம் படத்தின் மூலம் மீண்டும் மாஸாக ரீ -என்ட்ரி கொடுத்தார் சிம்பு. ஆனால், அடுத்த படமான 'வந்தா ராஜாவா தான் வருவேன் ' படம் மாபெரும் தோல்விப்படமாக அமைந்தது. இதனால் மீண்டும் பழைய நிலைமைக்கே திரும்பினார் சிம்பு. ஆனால், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : தர்ஷன் சொன்ன சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் வேறு யாரும் இல்ல இந்த நடிகர் தான்.

எடையில் சிம்பு மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த படம் கைவிடபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த படம் பல்வேறு இழுபறிக்கு பின்னர் எப்படியோ மீண்டும் துவங்கி இருக்கிறது. இந்த நிலையில் சிம்பு தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் திரையுல பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/B8Fr3a6BktH/

https://www.instagram.com/p/B8Ez0_XBuvu/

மேலும், சிம்பு தனது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். சிம்புவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க ஏராளமான ரசிகர்கள் சிம்பு வீட்டின் முன் குவிந்தனர். மேலும், சிம்புவை சந்தித்த ரசிகர்கள் ஆரவாரம் செய்த போது சிம்பு தனது பாடலுக்கு ரசிகர்களை பார்த்தபடி ஆட்டம் போட்டார். அந்த வீடியோவை சிம்புவின் சகோதரி இலக்கியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full