சிம்பு வாங்கிய புதிய சொகுசு கார்..! எத்தனை கோடி தெரியுமா..? விலை கேட்டா அசந்துடுவீங்க

0
585
Simbu
- Advertisement -

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடும் சிம்பு ஒரு காலத்தில் பிஸியான நடிகராக திகழ்ந்து வந்தார். இடையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளாலும் தொடர் தோல்வி படங்களாலும் கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார்.

bentley-continental

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய “அச்சம் என்பது மடமையடா” என்ற படத்தின் மூலம் இழந்த தனது மார்க்கட்தை மீண்டும் பிடித்தார் சிம்பு. தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் “மாநாடு” படத்திலும், சுந்தர் சி இயக்கவிருக்கும் பெயரிடபடாதா புதிய படத்திலும் கமிட் ஆகியுள்ள சிம்பு சமீபத்தில் ஒரு புதிய வகை சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

- Advertisement -

நடிகர் சிம்பு ஏற்கனவே BMW X6 என்ற உயர் ரக காரை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் Bentley Continental GT என்ற காரை வாங்கியுள்ளார். சுமார் 4000 சிசி திறன் கொண்ட இந்த காரின் விலை 4 கோடி வரை இருக்கும். மேலும், லிட்டருக்கு 6 முதல் 8 கி மீ தூரம் வரை செல்லும்.

Actor simbu

இந்த வகை காரை நடிகர் தனுஷ் ஏற்க்னவே பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் மிகவும் கஷ்டத்தில் இருந்த சிம்பு தற்போது அடுத்தடுத்து படத்தில் கமிட் ஆகியுள்ளதால் இந்த காரை வங்கியுள்ளதாக சிலர் கூறிவருகின்றனர்.

Advertisement