விஷாலை எதிர்க்க சிம்பு உருவாக்கிய படை ! யார் அவர்கள் ? புகைப்படம் உள்ளே !

0
1634
simbu
- Advertisement -

கடந்த சில வருடங்களாக நடிகர் விஷாலின் செய்திகள் அதிகமாக அனைவரது காதிற்கும் போய் சேர்கிறது என்றால் அவர் அதற்கான வேலைகள் நிறைய செய்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தலைவராக இருந்தபோது அவர் அரசியலில் இருக்கிறார் இதனால் இது ஆரோக்கியமான சங்கமாக இருக்காது எனக் கூறி பிரச்சாரம் செய்து நடிகர் சங்கத்தை கைப்பற்றினார் விஷால் .
vishalஆனால், இவரே சமீபத்தில் நடைபெற்ற ஆர்.கே.நகர் தேர்தலில் நிற்க மனுதாக்கல் செய்தார். இங்கு தான் ஆரம்பித்தது விஷாலுக்கு பிரச்சனை. சொன்னதையும் செய்யவில்லை, ஆனால் அரசியலிலும் ஈடுபடுகிறார். அதன் காரணமாக அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து பதவி விலக வேண்டும் எனக் கூறி போராட்டம் நடத்தினர் இயக்குனர் சேரன். இவர் ஒன்று.

-விளம்பரம்-

அதேபோல், நடிகர் சங்க தேர்தலில் விஷாலுக்கு எதிராக சரத்குமார் ஆதரவாக துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் சிம்பு. ஆனால் சில வாக்குகள் வித்யாசத்தில் தோற்றுவிட்டார். ஆனால், விஷாலுக்கும் சிம்புவிற்கு ஆண்டாண்டு காலமாக பகை இருப்பதாக சொல்லப்படுகிறது. இதே விஷாலின் சங்கம் தான் தற்போது சிம்பிவிக்ரு ரெட் கார்ட் போட்டு வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவர் தலைமை.

- Advertisement -

விஷால் பதிவு விலகக் கோரி போராட்டம் நடத்திய சேரனுக்கு முதலில் ஆதரவு அளித்தவர் இயக்குனர் அமீர்.
அதே போல் அன்புச்செழியன் விஷயத்தில் முதலில் எதிர்புக்ககுரல் கொடுத்ததும் இதே அமீர் தான். அதேபோல், அசோக்குமார் தற்கொலைக்கு பிறகு உணர்ச்சி பொங்க பேசிய விஷால் என்ன செய்யப் போகிறார் என்பதை நான் கண்டிப்பாக பார்த்துக்கொண்டு தான் இருப்பேன் எனக் கூறியதும் அமிர்தான். இவர் இரண்டு.
simbuதற்போது சரியான அரசியல் காரணமும் இதில் உள்ளது. சிம்புவிற்கு அரசியல் அத்துபடி இல்லை எனினும். தமிழ் தேசியம், தமிழர் உரிமை பேசும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் இந்த கூட்டணியில் உள்ளார். ஆந்திர சினிமா சங்கத்தில் ஒரு தமிழ் நடிகர் தேர்தலில் போட்டியிட முடியுமா என எதார்த்தம் பேசியவர் இதே சீமான் தான். அதேபோல் விஷால் ஆந்திராவிற்கு சென்று நான் ஒரு தெலுங்கு பையன் என ஏன் கூறினார் என்று முதலில் கேள்வி எழுப்பியவரும் சீமான் தான். இவர் மூன்று.

ஆக, விஷாலுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட எதார்த்த வாதம் பேசும் கூட்டணியை கூட்டியுள்ளார் சிம்பு. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கூட சிம்புவுக்கு முதலில் ஆதரவு அளித்தது சீமான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement