Atmanனு பேர சிம்புவே தான் அவருக்கு வச்சிக்கிட்டாரு, அதுவுக்கு அர்த்தம் இதான்னு சொன்னார் – சிம்புயின் பயிற்சியாளர் சொன்ன ரகசியம்.

0
630
simbu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் இயக்குனர், நடிகர் டி ராஜேந்திரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அவர்கள் மாநாடு என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து சிம்பு அவர்கள் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சிம்புவின் உடல் தோற்றம் பயங்கரமாக மாறி இருந்தது. மேலும், இவர் உடல் எடை கொஞ்சம் வெயிட் போட்டு இருந்தது குறித்து பலரும் விமர்சித்து இருந்தார்கள். ஆனால், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படத்தில் சிம்பு சிக்கென்று உடல் எடையை குறைத்து பழைய ஸ்டைல் சிம்புவாக மாறி இருந்தார். இவருடைய கம்ப்ளீட் ட்ரான்ஸ்பர்மேஷன் குறித்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கேட்டு இருந்தார்கள். அதற்கு சிம்பு அவர்கள் ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோ ஒன்றை சமீபத்தில் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

சிம்பு பிட்னஸ் கோச் சந்தீப் ராஜ் அளித்த பேட்டி:

ரசிகர்கள் மத்தியில் சிம்புவின் ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோ செம்ம வைரலானது. மேலும், இந்த வீடியோவை சிம்புவின் ரசிகர்கள் பலரும் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் இந்த ஒர்க் அவுட் வீடியோ குறித்து சிம்பு பிட்னஸ் கோச் சந்தீப் ராஜ் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் கூறி இருப்பது, சிம்புவுடன் நண்பர் மகத் எனக்கு நல்ல பழக்கம். இவர் மூலமாகத்தான் சிம்புக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன். சிம்புவிடம் முதலில் பேசும் போது ரொம்ப வெயிட் போட்டு இருக்கேன் என்று வருத்தமாக இருந்தார். முதலில் பிசிகல் பிட்னஸ் ஆக்டிவிட்டி பண்ண ஆரம்பித்தோம்.

சிம்புவின் ஒர்க் அவுட் :

எந்த மாதிரியான எக்சசைஸ் எப்படி பண்ணனும் என்று சொல்லிட்டா போதும் சரியாக சிம்பு அதை செய்து முடித்து விடுவார். அதுமட்டுமில்லாமல் சரியான ஃபார்முலா தெரிந்து கொள்வார். மேலும், ஆர்கானிக் முறையில் தான் வெயிட் லாஸ் பண்ண ஆரம்பித்தோம். ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனால், எல்லா வலியையும் சிம்பு தாங்கிக் கொண்டார். முதலில் ஒர்க் அவுட் செய்ய ஆரம்பிக்கும் போது சிம்பு 8 கிலோ வரை குறைத்தார். இப்படியே படிப்படியாக வெயிட் குறைக்க ஆரம்பித்தோம். அது மட்டுமில்லாமல் ஒர்க் அவுட் பண்றவங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கக் கூடாது. சிம்பு இது எல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்டாக பாலோ பண்ணினார். நோ மீன்ஸ் நோ என்ற பார்முலாவை சரியான முறையில் சிம்பு பயன்படுத்தினார்.

-விளம்பரம்-

சிம்புவின் மத்த ஆக்டிவிட்டி:

எப்பவும் வெயிட் லாஸ் பண்ணா அதிக நேரம் எடுக்கும். 100 க்கும் மேலே இருந்த சிம்புவின் வெயிட் 85க்கு வந்தது. அப்புறம் மத்த ஆக்டிவிட்டி பண்ண ஆரம்பித்தோம். நீச்சல், பாஸ்கெட் பால், பாட்மிட்டன், டென்னிஸ் என எல்லா ட்ரெய்னிங்கும் சிம்பு எடுத்தார். பின் 65 கிலோ வந்தார். வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு 65 கிலோ இருக்கார். வெயிட் லாஸ் பண்ணும்போது உணவு முறைகளும் சரியாக இருக்கணும். சிக்கன், மட்டன், டைட் புட் பாலோ பண்ணனும். இதைத்தவிர கோதுமை சார்ந்த உணவுகள் சிம்பு விரும்பி சாப்பிட்டார். ஒர்க் பண்ணிட்டு சாப்பிட முடியாத நேரங்களில் ஜூஸ் எடுத்துக் கொண்டார்.

சிம்பு எடுத்து கொண்ட உணவு முறை:

வீட்டில் செஞ்ச சாப்பாடு மட்டுமே சிம்பு சாப்பிட்டார். அதிலும் நிறைய கீரை சேர்த்து கொண்டார். எங்களுடைய பயிற்சிக்கு பல மாதங்கள் தேவைப்பட்டது. ஏதாவது ஒரு படத்துக்காக வெயிட் லாஸ் பண்ணல சிம்பு. லைஃப்ஸ்டைல் மாறுவதற்காக தான் இது நடந்தது. சிம்பு வெயிட் லாஸ் வீடியோ பார்க்கிறப்ப இவருடைய ரசிகர்கள் எல்லோரும் எமோஷனலாக பீல் பண்ணி கருத்துக்கள் போடுகிறார்கள். எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு. சிம்பு உடைய ஒர்க்கவுட் வீடியோவுக்கு atman வைத்தது சிம்புதான். எதுவாக இருந்தாலும் ஆத்மா சம்பந்தப்பட்டது என்று சிம்பு நம்புவார் என்று கூறியிருந்தார்.

Advertisement