செஞ்ச Workout எல்லாம் வேஸ்ட் – மீண்டும் உடல் எடை கூடிய சிம்பு. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.

0
281
simbu
- Advertisement -

மீண்டும் உடல் எடையை சிம்பு அதிகரித்துள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் இயக்குனர், நடிகர் டி ராஜேந்திரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

பின் இடையில் இவரின் படங்கள் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார். பின் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதோடு சமீப காலமாகவே சிம்பு அவர்கள் தன்னுடயை படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

- Advertisement -

இதையும் பாருங்க : தளபதி 67ல் சமந்தா வில்லி என்றால் இவர் தான் விஜய்க்கு ஜோடியா ? அட, இவரா ?

மாநாடு படம்:

இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தர். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. யுவன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

சிம்பு நடிக்கும் படம்:

படத்தில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் சிம்புவும், தனுஷ்கோடி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யாவும் மிரட்டி இருந்தார்கள். ஒரு புத்தம் புதிய வித்தியாசமான கதைக்களத்துடன் மீண்டும் என்ட்ரி கொடுத்திருந்தார் சிம்பு. எப்போதும் போல் இல்லாமல் வெங்கட்பிரபு ஒரு வித்தியாசமான டைம் லூப் கான்செப்ட்டை கொண்டு படமாக்கியிருந்தார். இதை தொடர்ந்து சிம்பு நடிப்பில் அடுத்ததாக மகா திரைப்படம் வெளியாக உள்ளது.

பத்து தல படம்:

இந்த படத்தின் நாயகியாக ஹன்சிகா நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. இது தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகம் ஏற்படுத்துகிறது. இதை அடுத்து ஆகஸ்ட் மாதம் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் பலரும் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றன. அதேபோல் இந்த படத்தை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக உள்ள பத்து தல படத்தில் சிம்பு நடிக்கிறார்.

உடல் எடையை அதிகரித்து உள்ள சிம்பு:

இந்த படம் கன்னடத்தில் வெளிவந்த மஃப்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக். இந்நிலையில் சிம்பு உடல் எடையை அதிகரித்து உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் மாநாடு சிம்பு அவர்கள் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருந்தார். இவருடைய கம்ப்ளீட் ட்ரான்ஸ்பர்மேஷன் குறித்து ரசிகர்கள் பலரும் பாராட்டி இருந்தார்கள். இந்த நிலையில் தற்போது பத்து தல படத்துக்காக சிம்பு மீண்டும் உடல் எடையை அதிகரித்து இருக்கிறார். அவருடைய சமீபத்திய புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement