கடந்த சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சிம்பு செக்க சிவந்த வானம் படத்திற்கு பின்னர் வரிசையாக படத்தில் நடித்து வருகிறார்.இறுதியாக இவரது நடிப்பில் வெளியான வந்தா ராஜாதான் வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார். ஆனால், தற்போது இந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில், மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார். தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி… துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

Advertisement

ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை. 

அதனால் சிம்பு “நடிக்க இருந்த” மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும்.இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. பத்திரிகையாளர்கள் அவ்வளவு துணை நின்றார்கள். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

Advertisement

மேலும், இந்த படம் கைவிடபட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபும் ட்வீட் செய்துள்ளார். அதில், என் சகோதரர் சிம்புவுடன் வேலை செய்ய முடியவில்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது. தயாரிப்பாளாரின் நிதி பிரச்சனையினால் இந்த படம் கைவிடபட்டுள்ளது. இருப்பினும் தயாரிப்பாலரின் இந்த முடிவை மதிக்கறேன்

Advertisement

இந்த திரைப்படம் கைவிட பட்டதால் சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகின்றனர். மேலும், இந்த படம் கைவிடபட்டதற்கு சிம்பு தான் காரணம் என்றும் நினைத்து வரும் ரசிகர்கள் வாய்க்கு வந்தபடி கமன்ட் செய்து வருகின்றனர்.

Advertisement