வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், சமுத்திரக்கனி, அமீர், கிஷோர், போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்த வட சென்னை திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த படத்தின் 2 ஆம் பாகத்தின் பணிகளை துவங்கிவிட்டார் இயக்குனர் வெற்றிமாறன். இந்த நிலையில் இந்த படத்திற்கும் சிம்புவிற்கு உள்ள தொடர்பை கொஞ்சம் பார்க்கலாம். வாட சென்னை படம் முதன் முதலில் சிம்பு தான் நடிப்பதாக இருந்தது. வட சென்னை உருவான கதை மிகவும் ஸ்வாரசியமானது.

Advertisement

‘அது ஒரு கனாக்காலம்’ படத்தில் வெற்றிமாறன் உதவி இயக்குனராக பணியாற்றிய போது வடசென்னையை சேர்ந்த ஒருவர் இந்த கதையை வெற்றிமாறனிடம் கூறியுள்ளார் . மேலும், அந்த கதை வெற்றி மாறனுக்கு பிடித்து போய்விட அந்த கதையை தனுஷிடம் வெற்றிமாறன்கூறியுள்ளார் . தனுஷும் பிற்காலத்தில் இந்த படத்தை அவர்களது முதல் படமாக உருவாக்கலாம் என்று கூறியிருக்கிறார். ஆனால், படத்தின் படத்தின் பட்ஜெட் , நடிகர்கள் உட்பட பல காரணங்களால் இதை அவர்களது முதல் படமாக உருவாக்கவில்லை.

இதையும் பாருங்க : இயக்குனர் தங்கர் பச்சனுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்காரா.. சினிமாவில் வேற நடிக்க போறாராம்..

அதன் பின்னர் தனுஷ் மற்றும் பின் ‘பொல்லாதவன்’ ‘ஆடுகளம்’ போன்ற படங்கள் வெளியானது. ஆடுகளத்திற்கு பின்னும் அதே போல் இந்த படம் குறித்த பேச்சு எழுந்துள்ளது. பின்னர் அதுவும் தள்ளிபோய் ‘விசாரணை’ படத்திற்கு பிறகு இந்த படத்தை தொடங்கலாம் என்று தனுஷும் வெற்றிமாறனும் முடிவு செய்தனர்.  ஆனால், அதன் பின்னர் தனுஷ் பிஸியாகிவிட இந்த படத்தை சிம்புவை வைத்து பண்ணலாம் என்று திட்டமிட்ட வெற்றிமாறன். இந்த படத்தின் கதையை சிம்புவிடம் சொல்லியுள்ளார். சிம்புவும் ஓகே சொல்லி படத்தை ஆரம்பிக்கும் சமயத்தில், ஏதோ ஒரு காரணத்துக்காக அமெரிக்கா சென்ற சிம்பு வழக்கம் போல அங்கு மூன்று மாதத்திற்கும் மேல் தங்க வேண்டியது இருந்தது.

Advertisement

இதனால் படப்பிடிப்பு தள்ளிப் போக சிம்பு மீண்டும் எப்போது வருவார் என்பது தெரியாத நிலையில் மீண்டும் தனுஷை வைத்து வடசென்னை படம் தொடங்கப்பட்டது. இப்படி ஹீரோ பாத்திரத்திற்கு தனுஷ், சிம்பு என அவ்வப்போது மாறி மீண்டும் தனுஷ் என மாறியது போலவே அமீர் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது எனபதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அமீர் நடித்த ராஜன் கதாபாத்திரம் தான் இந்த படத்தில் பெரிதும் பேசப்பட்டது. இப்படிபட்ட கதையை சிம்பு நிராகரித்துள்ளது தற்போது வைரலாக பேசபட்டு வருகிறது.

Advertisement

இந்த நிலையில் வட சென்னை படத்தில் நடிகர் சிம்பு நடிப்பதாக இயக்குனர் வெற்றி மாறன் கடந்த 2011 ஆம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்த சில பதிவுகள் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதில் ஆரம்பத்தில் சிம்பு ஒரு முக்கிய வில்லனாகவும், ராணா ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாக வெற்றி மாறன் அறிவித்துள்ளார். மேலும், 2012 ஆம் ஆண்டு கிளௌட் 9 தயாரிப்பில் இந்த படத்தின் பணிகள் துவங்கும் என்று அறிவித்திருக்கிறார். அதன் ராணா இந்த படத்தில் இருந்து விலகியதாகவும் 2012 ஆம் ஆண்டு அறிவித்த வெற்றிமாறன். அடுத்த சில மாதங்களில் வசென்னை படத்தின் படப்பிடிப்புகள் தள்ளி வைக்கபடுவதாகவும் அறிவித்தார். ஆனால், சிம்பு கண்டிப்பாக இந்த சிம்பு வில்லனாக நடிப்பார் என்று கூறி இருந்தார் வெற்றி மாறன்.

ஆனால், இந்த படத்திலும் சிம்பு நடிக்கவில்லை. ஒரு வேலை இந்த படத்தில் சிம்பு நடித்திருந்தால், அது சிம்பு மற்றும் தனுஷ் நடிக்கும் முதல் படமாக அமைந்திருக்கும். மேலும், படமும் இதை விட வேறு லெவலில் இருந்திருக்கும். ஆனால், வழக்கம் போல நல்ல கதைகளை விட்டுவிட்டு நடிகர் சிம்பு மோசமான கதைகளை தான் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் 2011 ஆம் ஆண்டிற்கு பின்னர் தான் நடிகர் சிம்பு நடித்த பல படங்கள் தோல்வியில் முடிந்தது. ஒரு வேலை 2011 ஆம் ஆண்டே சிம்பு வட சென்னை படத்திற்கு ஓகே சொல்லி இருந்திருந்தால் சிம்பு வேறு லெவலில் இருந்திருப்பார்.

Advertisement