வெந்து தணிந்தது காடு படத்தின் 50வது நாள் வெற்றி விழா கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்களால் கடுப்பாகி இருக்கிறது சரத்குமார். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிம்பு. சில ஆண்டுகளுக்கு முன்னர் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்த சிம்பு இடையில் நடித்த பல்வேறு திரைப்படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தது. அதேபோல இவர் உடல் எடை கூடியதால் இவர் நடிக்கும் பழங்கள் எல்லாம் பெரும் கேள்விக்கு உள்ளானது. இப்படி ஒரு நிலையில் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார்.

ஆனால், அந்தத் திரைப்படமும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்திருந்தார்.இ ந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து சிம்புவிற்கு ஒரு ரீ என்ட்ரியாக அமைந்திருந்தது இந்த படத்தின் வெற்றிக் களிப்பில் இருந்த சிம்புவிற்கு அடுத்த ஒரு உற்சாகமாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் அமைந்திருந்தது. இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார்.

Advertisement

பெரும் வரவேற்பை பெற்ற படம் :

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான்இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் சிம்புவுடன், ராதிகா, சித்தி இத்னானி உட்பட பல நடிகர்கள் நடித்துஇருந்தனர். இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தது. பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் சிம்பு அவர்கள் முத்து எனும் கதாபாத்திரத்தில்நடித்து இருந்தார்.

50வது நாள் கொண்டாட்டம் :

இப்படி ஒரு நிலையால் இந்த படத்தின் 50வது நாள் வெற்றி கொண்டாட்டம் விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் , சரத்குமார் உள்ளிட்ட துறை பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய சிம்பு இந்த காலகட்டம் தமிழ் சினிமாவின் பொற்காலம். சமீபத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெறுகிறது.

Advertisement

சிம்பு பேசியது :

விக்ரம் தொடங்கி பொன்னியின் செல்வன், கன்னட திரைப்படமான காந்தாரா மற்றும் தற்போது வெளியாகியிருக்கும் லவ் டுடே வரை படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் நான் சொல்ல வேண்டும். படம் பண்ணிட்டு இருக்கும் போது பல அப்டேட் கேட்கிறீர்கள். உங்களுடைய ஆர்வம் எனக்கு புரிகிறது. ஆனால், படக்குழு ஒரு படத்தை உங்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக அதிக வேலைகள் செய்து கொண்டிருக்கிறோம்.

Advertisement

ரசிகர்களுக்கு வேண்டுகோள் :

தினமும் நீங்கள் ஏதாவது அப்டேட் கொடுங்கள் என்று கேட்கும் பொழுது ஒரு தவறான முடிவு எடுக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. எங்களுக்கு அதற்கான இடம் கொடுத்தால் தான் நல்ல படங்கள் வரும் அதனை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். எல்லா ரசிகர்களும் கதாநாயகர்களை தூக்கி மேலே வைப்பார்கள். நான் என் ரசிகர்களை தூக்கி மேலே வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் படம் மட்டுமல்ல எந்த படத்திற்கும் ரொம்ப தொந்தரவு செய்யாதீர்கள் என்று ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோளை விடுத்துள்ளார் சிம்பு.

Advertisement