அஜித்தின் சிம்ப்ளிஸிட்டி வேற லெவல். வைரல் ஆகும் வீடியோ.

0
666
Thala Ajith
- Advertisement -

தமிழகத்தில் அசைக்க முடியாத ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார் தல அஜித். அஜித்தின் திரைப்படங்கள் ரிலீசாகும் நாள் அன்று திரையரங்கமே விழாகோலம் போல் காட்சியளிக்கும்.

-விளம்பரம்-

கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் சிவா அவர்களின் இயக்கத்தில் நடித்து வந்து அஜித், தற்போது தீரன் பட இயக்குனரான ஹெச்.வினோத் அவர்களின் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகை ஸ்ரீதேவிக்கு அளித்த வாக்கின் அடிப்படையில் அவரது தயாரிப்பு நிறுவனத்துடன் அஜித் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

வித்யா பாலன், ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் என பல புதுமுகங்களுடன் இந்த படம் தயாராகி வருகிறது. பெண்களுக்கான சமூக அக்கறையுடன் இந்த கதைக்களம் அமைந்துள்ளதாகவும் இந்த திரைப்படம் சமூகத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கோடம்பாக்க வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் அஜித்தின் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அவர் ஒரு சாதாரண விலை குறைந்த காரில் சீட் பெல்ட் அணிந்து கொண்டு பயணம் செய்யும் அந்த வீடியோ அவரது சிம்ப்ளிஸிடியையும் சாலை விதிகளை பின் பற்றும் விதத்தையும் காட்டுவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து மகிழ்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement