பாடகி சித்ரா பாடி பார்த்திருப்பீங்க Go Karting செய்து பார்த்துள்ளீர்களா? – அரிய புகைப்படம் இதோ.

0
222
chitra
- Advertisement -

பாடகி சித்ராவின் அரிய புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாத் துறையில் சின்னக் குயில் சித்ரா என்று சொன்னால் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு மனதை வருடும் ஏராளமான பாடல்களை பாடி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஏராளமான மொழிகளில் 25,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி சாதனை படைத்து இருக்கிறார். மேலும், இவர் தனது பாடலுக்காக 6 முறை தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும் வாங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

பாடகி சித்ரா அவர்கள் சினிமா துறைக்குள் நுழைந்து 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவருடைய குரல் மிகவும் பரிச்சயம். இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி, ஒடியா, பெங்காலி, பஞ்சாபி, குஜராதி, துளு, ராஜஸ்தானி, உருது, சமஸ்கிருதம, பகாடா மற்றும் மராத்தி என பல மொழிகளில் பாடல்கள் பாடி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் Malay, Latin, Arabic, Sinhalese, English மற்றும் French போன்ற வேறு நாடு மொழிகளிலும் பாடி இருக்கிறார்.

- Advertisement -

பாடகி சித்ராவின் இசைப்பயணம்:

இவரது பாடலுக்கும் இனிமையான குரலுக்கும் இன்றளவும் லட்சக் கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இதனிடையே பாடகி சித்ரா அவர்கள் விஜய சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பாடகி சித்ராவிற்கு ஒரே மகள் தான் இருந்தார். அவர் பெயர் நந்தனா. மேலும், சித்ரா தனது ஒரே மகளை எந்தவொரு நிகழ்ச்சிக்குச் சென்றாலும் கூடவே அழைத்துச் செல்வாராம். அந்த வங்கியில் 2011-ம் ஆண்டு சித்ரா அவர்கள் இசைப்புயல் ஏ ஆர் ரஹமான் நிகழ்ச்சி ஒன்றில் பாட துபாய் சென்றிருந்தார்.

சித்ரா மகள் இறப்பு:

அப்போது அவர் அவரது மகள் நந்தனாவையும் அழைத்து சென்று இருந்தார். எதிர்பாராதவிதமாக சித்ரா மகள் நந்தனா நீச்சல் குளத்தில் மூழ்கி அநியாயமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. தன் ஒரே மகள் இறந்த சோகத்தில் இருந்து இன்றளவும் மீள முடியாமல் இருந்து தவித்து வருகிறார் சித்ரா. மேலும், சித்ரா அவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பல ஆண்டு காலமாக பங்கு பெற்று வருகிறார்.

-விளம்பரம்-

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

அதிலும் விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர்,சீனியர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். அதே போல பேட்டி ஒன்றில் பங்கேற்ற சித்ரா, எனக்கு இருந்த ஒரு பிள்ளையை என்னிடம் இருந்து பிரித்தாளும் எனக்கு 100க்கணக்கான பிள்ளைகளை கொடுத்து இருக்கிறார் என்று கூறி இருந்தார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

Go Karting செய்யும் சித்ரா:

இந்த நிலையில் சித்திராவின் அரிய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், பல வருடங்களுக்கு முன்பு சித்ரா Go Karting செய்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அட நம்ம சித்ரா அம்மா இது! சித்ராவுக்கு பாட தான் தெரியும் என்று நினைத்தோம் Go Karting செய்ய தெரியுமா? என்று கமென்ட் போட்டு புகைப்படத்திற்கு லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள்

Advertisement