பப்ளீஸ் இப்படியெல்லாம் பண்ணாதீங்க – துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ஜோனிடா வெளியிட்ட வீடியோவை கண்டு ரசிகர்கள் அட்வைஸ்.

0
108
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை நடிகைகளை தாண்டி ஒரு சில துணை நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாவது வாடிக்கை தான். ஆனால், பாடகிகள் நடிகைகளுக்கு இணையாக பிரபலமாவது அரிதான ஒன்று தான். அந்த வகையில் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பல இளசுகளின் Crushஆக இருந்து வந்தனர். அவரை அடுத்து தற்போது அந்த இடத்தை பிடித்து இருப்பது இவர் தான். வேறு யாரும் இல்லை தற்போது தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் சென்சேஷனல் பெண் பாடகியாக திகழ்ந்து வரும் பின்னணி பாடகி ஜோனிதா தான்.

-விளம்பரம்-

டாக்டர் படத்தில் இவர் பாடிய செல்லம்மா பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி சூப்பர் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ‘அரபிக் குத்து’ பாடலின் லிரிகள் வீடியோ வெளியான போது மேலும், இந்த பாடலின் விஜய் – பூஜா ஹேக்டே ஜோடியை விட ஜோனிதாவை தான் ரசிகர்கள் பலரும் ரசித்துஇருந்தனர். மேலும், பூஜாவை விட ஜோனிதாவையே நாயகியாக போட்டு இருக்கலாம் என்றும் கூறி வந்தனர்.

- Advertisement -

ரசிகர்களை கவர்ந்த பாடகி :

இந்த பாடல் வெளியானதில் இருந்தே பூஜா ஹேக்டேவை விட ஜோனிதாவின் மீம்கள் தான் அதிகம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஜோனிதா காந்தி தமிழில் பல பாடல்களை பாடி இருக்கிறார். அதிலும் குறிப்பாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் இடம்பெற்ற ‘செல்லம்மா’ பாடலை கூட ஜோனிதா அனிருத்துடன் இணைந்து பாடி இருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

வைரலான ஜோனிதா மீம்ஸ் :

இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனது. அதோடு சோசியல் மீடியா முழுவதும் இந்த பாடல் அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த பாடலின் மூலம் ஜோனிடா காந்தி அவர்களுக்கு சோஷியல் மீடியாவில் ஒரு தனி ரசிகர் கூட்டம் சேர்ந்தது.மேலும், ஜோனிட காந்தி அவர்கள் இந்தோ- கன்னடிய பாடகி ஆவார். இவர் டெல்லியில் பிறந்து இருந்தாலும் தன்னுடைய ஏழு வயதிலேயே கனடாவிற்கு சென்றுவிட்டார்.

-விளம்பரம்-

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் ஆங்கிலம், இந்தி, பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, கன்னடம் என பல மொழிகளில் பாடியுள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் தான் பாடகியாக இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் ஓ காதல் கண்மணி படத்தில் பாடினார்.

ஜோனிடா பதிவிட்ட வீடியோ :

இப்படி ஒரு நிலையில் ஜோனிடா தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முதலில் டவலை மட்டும் கட்டிக்கொண்டு இருக்கும் அவர் பின்னர் ஒரு கவர்ச்சியான உடையில் மாறி இருப்பது போல அந்த வீடியோ இருக்கிறது. இதை கண்ட ரசிகர்கள் இப்படியெல்லாம் பண்ணாதீர்கள் என்று அட்வைஸ் செய்து வருகின்றனர். ஜோனிடா தற்போது நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் வாக்கிங்/ டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement