கடந்த இரண்டு மாதங்களாக இந்த கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போது போரை விட பயங்கர பீதியை ஏற்படுத்தி இருப்பது இந்த கரோனா வைரஸ் தான். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த கரோனா வைரஸினால் பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement

இந்த கரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள். இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். மேலும், கரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் ஓரிடத்தில் கூடுவதை மிகவும் தவிர்த்துக் கொண்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில் பாலிவுட்டின் முன்னணி பாடகியாக வலம் வரும் கனிகா கபூர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி உள்ளார். தற்போது லக்னோவ் KGMU மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார் கனிகா . இவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருந்தது . இதனால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருந்தனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் கனிகா மீது இந்திய அரசியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாடகி கனிகா கபூர் கடந்த பத்து நாட்களுக்கு முன் லண்டனில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ விற்கு வந்துள்ளார் கடந்த 4 நாட்களாக அவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்து வந்ததால் மருத்துவரை சந்தித்தபோது தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்ததாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், கடந்த 14ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச மாநில சுகாதார அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் கலந்துகொண்டிருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தானை சேர்ந்த எம்பி துஷ்யந்த் சிங் என்பவரும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கனிகாவும் கலந்து கொண்டதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருக்கும் என்ற அச்சத்தில் தங்களை தனிமை படுத்திக்கொண்டனர். இந்த நிலையி தான் லண்டனில் இருந்து திரும்பி வந்ததை மறைத்த கனிகா நோய்த்தொற்றை பரப்பியதாக இந்திய தண்டனை சட்டம் ஐபிசி 269 மற்றும் ஐபிசி 207 மற்றும் ஐபிசி 188 ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. நாடே கொரோனாவின் அச்சத்தால் பீதியில் இருக்கும்போது இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொண்டிருக்கும் கனிகாவிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement