பாடகி மஹதிக்கு இவ்வளவு பெரிய மகனா – வைரலாகும் வீடியோ. வியந்து போன ரசிகர்கள்.

0
112
mahathi
- Advertisement -

பாடகி மஹதி மகனின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் அதை பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். தமிழ் திரையுலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர்கள், பாடகர்கள் கொடிகட்டி பறந்து வருகிறார்கள். அதிலும் 80, 90 காலகட்டத்தில் இருந்த பாடகர்களை யாராலும் மறக்கவே முடியாது. அவர்களுடைய பாடல்களை எல்லாம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் இன்றும் கேட்கப்பட்டு தான் வருகிறது.

-விளம்பரம்-

அந்த அளவிற்கு அவர்கள் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் திரை உலகில் அற்புதமான பாடல்களை பாடி மக்கள் மத்தியில் பிரபலமான பாடகியாக திகழ்ந்தவர் மகதி.
இவர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் சாமி. இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த அய்யய்யோ அய்யய்யோ என்ற பாடலை பாடியதன் மூலம் தமிழ் சினிமா உலகுக்கு அறிமுகமாகியிருந்தார் மஹதி.

- Advertisement -

மஹதி இசைப்பயணம்:

அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடி இருக்கிறார். அதோடு இவர் கர்நாடக இசை கலைஞரும் ஆவார். மேலும், இவர் சிறந்த பாடகிக்காக தமிழக அரசு விருதினை 2007 ஆம் ஆண்டு பெற்றிருந்தார். இதுவரை இவர் முப்பதுக்கு மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார். இவர் படங்களில் பாடுவது மட்டும் இல்லாமல் நிறைய இசை கச்சேரிகளிலும் பங்கு பெற்று இருக்கிறார்.

மஹதி கணவர்

சின்ன திரையில் மஹதி:

மேலும், இவர் சின்ன திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான சிங்கர் நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். அந்த வகையில் பல ஆண்டு காலமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மஹதி நடுவராக பங்கு பெற்றிருக்கிறார். இவர் விஜய் டிவியில் மட்டுமில்லாமல் ஜீ தமிழ், கலர்ஸ் போன்ற பிறமொழிச் சேனல்களிலும் இசை நிகழ்ச்சியில் நடுவராக பங்கு பெற்றிருக்கிறார்.

-விளம்பரம்-

மஹதி குடும்பம்:

இதனிடையே இவர் 2008 ஆம் ஆண்டு ஸ்ரீகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, பாடகி மஹதி எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தன் குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை இவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவார்.

மஹதி மகனின் புகைப்படம்:

அந்த வகையில் தற்போது பாடகி மகதி பதிவிட்டு இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, இன்ஸ்டாகிராமில் மகதி தன் மகனுடன் எடுத்த லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர் தன் மகனுக்கு பாட்டு சொல்லி கொடுத்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பாடகி மகதிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா! என்று ஆச்சரியத்துடன் வீடியோவை ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement