பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் மிமிக்ரி மாப்பிள்ளை இவர்தான்..!

0
231
vaikom-vijayalakshmi

தமிழ் சினிமாவில் தனது சொந்த திறமையால் எந்த ஒரு பின்பலமுமும் இல்லாமல் பாடகராக இருந்து வந்தவர்கள் மிகவும் சொற்பமே. அந்த வகையில் வைக்கோம் விஜயலக்ஷ்மியை இசை பிரியர்கள் அனைவருக்கும் தெரியும்.

vaikom vijayalakshmi

உடலால் ஊனமுற்றாலும் தனது வித்யாசமான குரலால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் பின்னணி பாடகி வைக்கோம் விஜயலக்ஷ்மி. குக்கூ படத்தில் “கொடையில மழை போல ” என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். பின்னர் தமிழில் எண்னெற்ற படலங்களை பாடியுள்ளார்.

வைக்கோம் விஜயலக்ஷ்மிக்கு கடந்த கடந்த 2016 ஆம் ஆண்டு சந்தோஷ் என்ற நபருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், சிறுது மாதம் கழித்து சில பல மனஸ்தாபங்களால் அந்த திருமணம் நடக்காமல் போனது. இந்நிலையில் தற்போது வைக்கோம் விஜயலக்ஷ்மிக்கு மீண்டும் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

vaikom

vijayalakshmi

vaikam vijayalakshmi

தற்போது வைக்கோம் விஜயலக்ஷ்மிக்கும், மிமிக்ரி கலைஞர் மேரி அனுப் என்பவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரது திருமண நிச்சயதார்த்தம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி விஜயலக்ஷ்மி வீட்டில் நடைபெற இருக்கிறது. இதையடுத்து திருமணம் அக்டோபர் மதம் 22 ஆம் தேதி ஹாதேவ் கோவிலில் நடைபெறவுள்ளது.