விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் ரோகினி-விஜயா செய்த வேலையால் ஸ்ருதி-ரவி, முத்து -மீனா ஆகிய நான்கு பேருக்கும் இடையே சண்டை பயங்கரமாக நடந்தது. இதையெல்லாம் பார்த்து விஜயா சந்தோசப்பட்டார். ஆனால், இது எல்லாம் நாடகம் என்று அண்ணாமலையிடம் முத்து சொல்லி இருந்தார். பின் மீனாவின் ஸ்கூட்டி, முத்து கார் மீது மோத, ஏதோ தெரியாத நபர்கள் போல இருவரும் சண்டை போட்டு இருந்தார்கள். அப்போது போலீஸ் வந்து விசாரிக்க, உடனே முத்து, இவர் என் மனைவி என்று சொல்லி இருந்தார்.
அப்போது சவாரி வந்த நபர், நீங்கள் சொன்ன பேயாட்டம் பொண்ணு இவர் தானா? என்று கேட்டவுடன் மீனாவிற்கு பயங்கர கோபம் வந்தது. இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் இருந்த ரோகினி, மனோஜ்க்கு போன் செய்து பொய் சொல்லி இருந்தார். ஆனால், மனோஜ்க்கு சந்தேகம் வந்து ரோஹினிடம், என்னிடம் பொய் சொல்லி எங்கே போனாய்? என்று கேட்க, உனக்கு கருங்காலி மாலை வாங்க போனேன் என்று ரோகினி சமாளிக்கிறார். இருந்தும் மனோஜ் நம்பவில்லை. வழக்கம்போல் ரோகினி ஏதேதோ ட்ராமா செய்து மனோஜை நம்ப வைத்தார்.
சிறகடிக்க ஆசை:
மேலும், மீனாவை சமாதானம் செய்ய முத்து பல ராஜதந்திர வேலைகளை செய்து அல்வா கொடுத்து சமாளித்து விடுகிறார். பின் முத்து, மீனா இருவரும் கிரிஷ் வீட்டிற்கு போயி தத்தெடுப்பது பற்றி பேச, ரோகினி அம்மா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். கடைசியில் முத்து, யோசித்து முடிவெடுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்ப, இதை ரோகினி இடம் அவருடைய அம்மா சொன்னவுடன் ரோகினி ஆவேசப்பட்டு கத்தி இருந்தார். பின் முத்து- மீனா இருவருமே கிரிஷ்யை தத்தெடுப்பது பற்றி அண்ணாமலையிடம் பேச, அண்ணாமலை, வீட்டில் எல்லோரிடமும் பேசி முடிவெடுக்கலாம் என்று சொல்லி ஆறுதல் சொல்லி இருந்தார்.
சீரியல் கதை:
இதை ஒளிந்து நின்று கேட்ட ரோகினி, விஜயாவிடம் சொல்லி ஏத்தி விடுகிறார். அடுத்த நாள் ரோகினி, கிரிஷுக்கு பள்ளியில் அட்மிஷன் போட்டு தன்னுடைய அம்மா, மகனை சென்னைக்கு அழைத்து வர திட்டம் போட்டார். பின் வீட்டில் மீனா, பூ கட்டிக் கொண்டிருக்க விஜயா, சமைத்து பார்வதி வீட்டிற்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வா என்று சொன்னவுடன் முத்து கோபம் வந்து சண்டை போடுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் சாப்பாடு கொண்டு வருவதில் முத்து- விஜயா இடையே வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.
இன்றைய எபிசோட்:
அப்போது அண்ணாமலை, நானே சாப்பாடு எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று சொன்னவுடன் மீனா இல்லை நான் கொண்டு போகிறேன் என்று சொல்லிவிடுகிறார். அதற்கு பின் வீட்டில் ஸ்ருதி- மீனா இருவருமே சந்தோஷமாக பேசி சாப்பிட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்து அண்ணாமலை சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் கடையில் மனோஜ்க்கு யாரோ ஒருவர் லெட்டர் கொண்டு வந்து கொடுத்து படிக்கச் சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
உடனே அந்த நபர் காணாமல் போகிறார். அந்த கடிதத்தில் உன் தம்பி கொலையாளி ஆவான், நீ தற்கொலை செய்து கொள்வாய் என்று இருந்ததை பார்த்து மனோஜ் ரொம்ப பயந்து அந்த நம்பரை தேடி செல்கிறார். பின் அவர் ஒரு டீக்கடையில் இருந்து பில் கொடு நான் சொல்கிறேன் என்று சொன்னவுடன் மனோஜும் நம்பி பணம் கொடுத்து விடுகிறார். அதற்குள் அந்த நபர் காணாமல் போய்விடுகிறார். அங்கிருந்தவர்கள் மனோஜை கிண்டலாக பேசி சிரிக்கிறார்கள். இன்னொரு பக்கம், மீனா தன்னுடைய மாமியாருக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு செல்லும் வழியில் முதியவர்கள் பசியால் இருந்ததால் அவர்களுக்கு போட்டு விடுகிறார். பரதநாட்டிய வகுப்பில் விஜயா மும்முரமாக கிளாஸ் சொல்லிக் கொடுத்துக் கொண்டுருக்கிறார்.