கவலைபடாதீங்க, கண்ணீருடன் மீனா வெளியிட்ட வீடியோவிற்கு ஆறுதல் கூறும் ரசிகர்கள்.

0
610
Siragadikka
- Advertisement -

விஜய் டிவில தான் முக்கியம் என்று சன் டிவி சீரியலில் இருந்து நடிகை விலகியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே, தமிழ் சின்ன திரையில் சன் டிவி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த இரு சேனல்களிலுமே போட்டி போட்டுக் கொண்டு வித்தியாசமான கதைகளுடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இதனால் வாரம் வாரம் இந்த இரு சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் டிஆர்பி ரேட்டிகளில் முன்னிலையில் வகுத்து வருகின்றது. அது மட்டும் இல்லாமல் விஜய் டிவி- சன் டிவி சீரியல் மூலம் பல நடிகர் நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்க.ள் இப்படி இருக்கும் நிலையில் விஜய் டிவி சீரியல் நடிகை சன் டிவி சீரியலில் இருந்து விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

விஜய் டிவி சீரியல்:

அதாவது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. சீரியலில் கதாநாயகன் முத்து வீட்டில் அவருடைய தாய், அவருடைய முதல் மற்றும் இளைய மகனுக்கு மட்டும் தான் சப்போர்ட்செய்கிறார். முத்து படிக்கவில்லை என்றும் அவன் ஓவராக பேசுகிறான் என்றும், தன்னுடைய தந்தைக்கு ஆதரவாக நிற்கிறான். இதனாலே சிறு வயதில் இருந்தே அவருடைய தாய்க்கு முத்து மீது வெறுப்பு கோபம் இருக்கிறது.

சிறகடிக்க ஆசை சீரியல்:

தன்னுடைய தாயின் பாசத்திற்காக முத்து ஏங்குகிறார். இன்னொரு பக்கம் கதாநாயகி பூக்கடை வியாபாரம் செய்கிறார். ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதற்கு பின் வீட்டில் வரும் இரண்டு மருமகள்களும் பணக்காரர்கள் என்று மீனாவை கொடுமை செய்கிறார் மாமியார். தற்போது இந்த தொடர் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களின் பேராதரவை பெற்றவர் நடிகை கோமதி ப்ரியா. இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற தொடர்களிலும் நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது சிறகடிக்க ஆசை சீரியல் தான். மேலும், இந்த தொடரில் மிகவும் அடக்க ஒடுக்கமான இவரது லுக்கிற்கு ஏகப்பட்ட ரசிகர்களும் இருக்கின்றனர்.

புலம்பும் ரசிகர்கள் :

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஓவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். சமீபத்தில் கூட மாடர்ன் உடையில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் நீங்க குடும்ப குத்து விளக்கு மாதிரி இருக்கீங்கன்னு நெனச்சோம் இப்போ நீங்களும் இப்படி ட்ரெஸ் போட ஆரம்பிச்சிடீங்களா என்று புலம்பினர். இப்படி ஒரு நிலையில் ‘மிக அருகினில் இருந்தும் தூரமிது’ என்ற வாமனன் பாடல் வரிக்கு கண்ணீர் சிந்தியபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட பலர் என்ன ஆச்சி என்று ஆறுதல் கூறி வருகின்றனர்.

Advertisement