விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து ஃபோனை கடலில் போட்டு விடு என்று ரோகினி சொன்னதால் வித்யாவும் எடுத்துக்கொண்டு போனார். அப்போது போகும் வழியில் போனை தொலைத்து விட்டார் வித்யா. ஆனால், இதை ரோகினி இடம் சொல்லாமல் வித்யா மறைத்தார். அந்த போனை முத்துக்கு தெரிந்த தாத்தா -பாட்டி எடுத்து வைதார்கள். இன்னொரு பக்கம் மீனாவுக்கு மண்டபத்தில் டெக்கரேஷன் செய்வதற்கு புதிய ஆர்டர் கிடைத்தது.

அந்த இடத்திற்கு வந்த மீனாவை காதலிக்கும் நபர், முத்து சொல்லி தந்தது போல எதார்த்தமாக பேசினார். ஆனால், மீனா பெரிதாக அவரிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை. அதை அடுத்து மனோஜ் கடையில் மந்திரித்த முட்டை வைத்திருந்தார்கள். இதை பார்த்து மனோஜ் ரொம்ப பயந்து விட்டார். பின் கடையில் இருப்பவர்கள் இன்னும் அதிகமாக மனோஜை பயமுறுத்த, ரோகினி அதை நம்பவில்லை. மனோஜ், ரோகினி இருவரும் மந்திரம் தந்திரம் செய்பவரை சந்தித்து பேசி இருந்தார்கள். அவர் பணத்தை பறிக்க இன்னும் பயமுறுத்தி பேசினார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் மீனாவை காதலிக்கும் நபர், முத்துவை சந்தித்து நடந்ததை சொல்ல, வேறு ஒரு ஐடியா முத்து தந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் மனோஜ், கடையில் மந்திரத்தை முட்டை இருந்ததைப் பற்றி விஜயாவிடம் சொல்ல, அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின் உங்களுக்கும் தான் பிரச்சனை இருக்கு, நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தான் பரிகாரம் பண்ணனும் என்றார் மனோஜ். ஆனால், விஜயா முடியாது என்று மறுத்தார். அப்போது வெளியே வரும்போது பேன் கீழே விழ, விஜயா பயந்து விட்டார்.

நேற்று எபிசோட்:
மறுநாள் காலையில் மோட்டர் வேலை செய்யாததால் தண்ணீர் இல்லை. இதனால் மொத்த குடும்பமே குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்தார்கள். அப்போது பிளம்பர், ஸ்விட்ச்சை ஆன் பண்ணாதீர்கள் என்றார். ஆனால், மனோஜ் இதை கவனிக்காமல் ஸ்விட்ச்சை போட்டு விட்டார். அந்த சமயம் பார்த்து விஜயா ஸ்விட்ச்சில் கை வைத்ததால் ஷாக் அடித்தது. ஒவ்வொருவருமே விஜயாவை தொடத்தொட எல்லோருக்குமே ஷாக் அடித்தது. இதை பார்த்து மீனா ஷாக்கில் நின்று விட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் எல்லோருக்குமே கரண்ட் ஷாக் அடித்துக் கொண்டிருப்பதால் மீனா பூரிக்கட்டை எடுத்துக் கொண்டு வந்து மாமியாரை அடிக்கிறார். உடனே எல்லோருமே கீழே விழுகிறார்கள். அந்த சமயம் வந்து முத்து, என்ன ஆச்சு? என்று கேட்டதற்கு, நடந்ததை மீனா சொல்கிறார். உடனே விஜயா, என்னை பழி வாங்க தான் இப்படி எல்லாம் நீ அடித்தாய் என்று சொல்ல, மீனா செய்தது தான் சரி. நீங்கள் அவள் மீது பழிப்படாதீர்கள் என்றார் முத்து.

சீரியல் ட்ராக்:
பின் யாரு ஸ்விட்ச்சை ஆன் செய்தது என்று கேட்க, நான் தான் என்று மனோஜ் சொன்னவுடன் எல்லோருமே அவரை முறைக்கிறார்கள். பின் மீனாவிற்கு மண்டபத்தில் டெக்ரேசன் செய்ய புதிய ஆர்டர் கிடைக்கிறது. இதை வீட்டில் எல்லோரிடமும் சந்தோஷமாக சொல்கிறார். ஆனால், வழக்கம் போல் விஜயா கிண்டல் அடிக்க, அண்ணாமலை திட்டி இருக்கிறார். பின் எல்லோருக்குமே பிரியாணி சமைப்பதற்காக தன்னுடைய தோழியிடம் உதவி கேட்கிறார் மீனா. அவரும் கரி வாங்க ஒரு இடத்திற்கு கூட்டிட்டு போகிறார். ஆனால், அங்கு மலேசியா மாமா தான் கறி வெட்டுகிறார். மீனாவை பார்த்தவுடன் அவர் முகத்தில் துணியை போட்டு மறைத்துக் கொள்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






