விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ் தன்னுடைய கல்யாண நாளை கிராண்டாக கொண்டாடி அந்த டிலர் ஆர்டரை வாங்குவது பற்றி வீட்டில் பேச எல்லோரும் ஒத்து கொண்டார்கள். இந்த வாரம் பங்க்ஷன் நடக்கும் இடத்திற்கு அண்ணாமலை குடும்பம் வந்தார்கள். ரோகினி எப்படியாவது இந்த பங்க்ஷனில் முத்து மொபைல் எடுக்க வேண்டும் என்று தன்னுடைய தோழியிடம் சேர்ந்து திட்டம் போட்டார். டீலர் ஓனர் வந்தவுடன் அவரை மனோஜ் வரவேற்று தன்னுடைய குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
தன்னுடைய அப்பா பிசினஸ்மேன், அம்மா பரதநாட்டிய ஸ்கூல் நிறைய வைத்திருக்கிறார் என்றெல்லாம் சொன்னார். அதற்குப் பின் முத்து 50 கார் வைத்து ரன் பண்ணி இருப்பதாக சொல்ல, முத்துவும் ஏதேதோ சொல்லி சமாளித்து இருந்தார். பின் நல்லபடியாக கேக் வெட்டி தங்களுடைய திருமண நாளை மனோஜ்-ரோகினி கொண்டாடி இருந்தார்கள். அதற்குப்பின் தன்னுடைய ஆர்டரை மனோஜிற்கு தருவதாக அந்த ஓனரும் சொன்னதால் மொத்த குடும்பமே சந்தோஷப்படுகிறது.
சிறகடிக்க ஆசை:
பின் முத்துவை வீட்டுக்கு மீனா அழைத்து சொல்ல பார்த்தார். ஆனால், ரோகினி அவர்களை தடுக்க நினைத்தார். மேலும், முத்துவை குடிக்க வைத்து அவருடைய மொபைலை எடுக்க வேண்டும் என்று ரோகினி திட்டம் போட்டார். இன்னொரு பக்கம் பார்ட்டியில் ஆண்கள் எல்லோருமே குடித்துக்கொண்டு ஜாலியாக இருக்க, முத்து மட்டும் குடிக்காமல் அமைதியாக இருந்தார்.
நேற்று எபிசோட்:
எல்லோருமே அவரை உஸ்பேத்தி விட, வேறு வழி இல்லாமல் முத்து குடித்து விட்டார். இதனால் ரோகினி ரொம்ப சந்தோஷப்பட்டு போனை எடுக்க திட்டம் போட்டார். நேற்று எபிசோட்டில் எல்லோருமே குடித்துவிட்டு ஆட்டம் பாட்டம் என்று சந்தோஷமாக இருந்தார்கள். எப்படியாவது முத்து போனை வாங்க வேண்டும் என்று ரோகினி முயற்சி செய்தார். ஆனால், முடியவில்லை. போதையில் முத்து, தாங்கள் பணக்கார குடும்பம் இல்லை என்று ஓனரிடம் சொன்னவுடன் அவர் ஷாக் ஆனார்.
சீரியல் ட்ராக்:
பின் அவர், முத்துவின் நேர்மையை பாராட்டி இந்த டீலங்கை மனோஜிடம் கொடுத்தார். அதற்குப்பின் எல்லோருமே வீட்டுக்கு வந்தார்கள். வரும் வழியிலேயே முத்துவின் போனை ரோகினி எடுத்து மனோஜ் பாக்கெட்டில் போட்டு விட்டார். பின் இவர்கள் மூவரும் குடித்து இருப்பதை அறிந்த அண்ணாமலை கோபப்பட்டு திட்டி வெளியிலேயே தூங்க சொன்னார். பெண்களை மட்டும் வீட்டிற்குள் வர சொன்னார். மனோஜ் இடம் இருக்கும் போனை எப்படியாவது எடுக்க வேண்டும் ரோகினி யோசித்தார்.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தன்னுடைய மொபைலை காணவில்லை என்று முத்து தேடுகிறார். பின் மீனா-முத்து இருவரும் வீடு முழுக்க மொபைலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதை எல்லாம் பார்த்து ரோகினி எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருக்கிறார். பின் முத்து தன் நண்பனுக்கு போன் செய்து, அதில் தான் வீடியோ இருக்கிறது என்று சொல்வதையும் ரோகிணி கேட்டு அமைதியாக இருக்கிறார். உடனே மீனா, என்ன வீடியோ என்று கேட்க, அவர் எதுவுமே பேசவில்லை.