சத்யாவை கைது செய்ய வந்த போலீஸ், முத்து எடுத்த அதிரடி முடிவு- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

0
157
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, சிட்டியை பார்த்து சத்யா வீடியோவை கொடுத்தார். அதை சிட்டி இன்டர்நெட்டில் வெளியிட்டார். முத்து போன் காணவில்லை என்று எல்லா இடத்திலும் தேடி இருந்தார். மீனா, முத்துவிற்காக ஒரு புது போனை வாங்கி இருந்தார். இந்த வாரம் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி ரொம்ப சந்தோஷப்பட்டு விஜயாவிடம் காண்பித்தார். தன்னிடம் பணத்தை திருடியது சத்யா தான் என்று தெரிந்தவுடன் விஜயா கொந்தளித்து ரோகினி உடன் மீனா வீட்டிற்கு சென்று இருந்தார்.

-விளம்பரம்-

பின் சத்யாவை சரமாரியாக அடித்து வெளுத்து வாங்கி இருந்தார். மீனாவிற்கும் அவருடைய அம்மாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. உடனே விஜயாவை தடுத்து நிறுத்தி மீனா கேட்டதற்கு, சத்யா வீடியோவை காண்பித்தவுடன் அவர் அதிர்ச்சியில் எதுவுமே பேசாமல் அமைதியாகி விட்டார் . உடனே விஜயா, ரொம்ப கேவலமாக மீனாவையும் அவருடைய குடும்பத்தையும் பேசி, இனிமேல் வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்றார். நேற்று எபிசோட்டில் சத்யா செய்த வேலையால் மீனாவின் குடும்பத்தினர் நிலைகுலைந்து அழுது கொண்டிருந்தார்கள்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

சத்யா எவ்வளவோ மன்னிப்பு கேட்டும் யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை. உடனே அவரின் அம்மா, எங்களுடைய வாழ்க்கையை அழித்து விட்டாய் என்று சத்யாவை அடித்து திட்டிக் கொண்டிருந்தார் இன்னொரு பக்கம் இந்த விஷயம் போலீசுக்கு தெரிந்து சத்யாவை கைது செய்ய வருகிறார்கள். பின் விஜயா, வீட்டில் பயங்கர கலவரமே செய்து கொண்டிருந்தார். அண்ணாமலையால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். அந்த சமயம் வந்த முத்து, என்னாச்சு? என்று கேட்க, நடந்ததை எல்லாம் மனோஜ்- ரோகினி சொல்ல, முத்துவால் எதுவுமே பேச முடியவில்லை.

நேற்று எபிசோட்:

வழக்கம்போல் விஜயா ருத்ர தாண்டவம் ஆடி மீனா வீட்டிற்கு வரக்கூடாது என்று சொன்னார். ஆனால், மீனாவை அழைக்க அவருடைய அம்மா வீட்டுக்கு முத்து வந்தார். முத்துவை பார்த்தவுடன் மீனா கட்டிப்பிடித்து அழுது மன்னிப்பு கேட்க, அவரை சமாதானம் செய்தார். மீனாவின் அம்மாவும் முத்துவிடம் மன்னிப்பு கேட்க, சத்யாவிற்கு துணையாக சப்போர்ட் செய்து முத்து பேசி இருந்தார். இந்த நிலையில் இன்று எபிசோடில் மீனா வீட்டில் எல்லோருமே ரொம்ப வருத்தத்தில் அழுது புலம்பி கொண்டிருக்க, முத்து சமாதானம் செய்கிறார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

அந்த சமயம் பார்த்து மீனா வீட்டிற்கு வந்த போலீஸ், சத்யாவை கைது செய்ய பார்த்தது. ஆனால், சத்யா அங்கு இல்லை. முத்து ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். இருந்தாலுமே போலீஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. உடனடியாக சத்யாவை போலீஸ் ஸ்டேஷனில் விட சொல்லி மிரட்டி விட்டு செல்கிறார்கள். பின் எல்லோருமே சத்யாவை தேட அவர் மாடியில் தற்கொலை செய்ய நின்று இருந்தார். எல்லோருமே கதறி அழுது தடுக்க பார்க்கிறார்கள். ஆனால், சத்யா கேட்கவில்லை. கடைசியில் முத்து அவரை எப்படியோ காப்பாற்றி விட்டார்.

சீரியல் ட்ராக்:

பின் சத்யா இங்கிருந்தால் பாதுகாப்பில்லை என்று தன்னுடைய நண்பர் செல்வம் வீட்டில் தங்க வைக்கிறார் முத்து. அதற்குப்பின் வீட்டிற்கு மீனாவை அழைத்துக் கொண்டு வருகிறார். ஆனால், விஜயா வழக்கம்போல் மீனாவை வீட்டிற்குள் விடாமல் பயங்கர கலவரமே செய்கிறார். முத்து எவ்வளவு சொல்லியும் விஜயா கேட்கவே இல்லை. மனோஜ்- ரோகினி ரொம்ப ஏத்தி விடுகிறார்கள். கடைசியில் தன்னுடைய அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு முத்து பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement