விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் அண்ணாமலை, ரோகினியை வீட்டிற்கு அழைத்து வரச் சொல்லி மனோஜிடம் கேட்டார். ஆனால், மனோஜ் முடியாது என்று மறுத்து விட்டார். விஜயாவிடமும் அண்ணாமலை எடுத்து சொல்லி புரிய வைத்தார். ஆனால், அவரும் கேட்கவில்லை. பின் கோபத்தில் விஜயா, பார்வதி வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு விஜயா, உன்னால் தான் எனக்கு இந்த நிலைமை? நீ சொன்னதால் தான் நான் ரோகினியை திருமணம் செய்தேன். அவள் மோசக்காரி, துரோகி என்றெல்லாம் ஆவேசமாக கத்தி இருந்தார். உடனே பார்வதி, நீ பணத்திற்காக ஆசைப்பட்டு அவளை கொண்டு வந்தாய். விசாரிக்க வேணாமா? என்று பார்வதி, விஜயா பக்கமே திருப்பி இருந்தார்.

இருந்தாலுமே விஜயாவிற்கு ஆத்திரம் அடங்கவே இல்லை. பின் முத்து-மீனா இருவருமே ஸ்ருதி, ரவியிடம் வீட்டில் நடந்ததை பற்றி சொல்ல, அவர்கள் ஷாக் ஆனார்கள். சுருதி, நாங்கள் உடனே கிளம்பி வீட்டிற்கு வருகிறோம் என்றார்கள். இன்னொரு பக்கம் சோகத்தில் மனோஜ், பாரில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தார். நிலை தெரியாத அளவிற்கு குடித்து தன் மனைவி செய்த துரோகத்தை நினைத்து புலம்பி கொண்டிருந்தார். அதன் பின் மீனாவிற்கு போன் செய்த பார்வதி, விஜயா பற்றி சொல்லி இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் மனோஜ், நிறைய குடித்துவிட்டு நிலை தெரியாத அளவிற்கு தடுமாறிக் கொண்டிருந்தார். அவருடைய நண்பர் தான் மனோஜை பைக்கில் வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருக்க, வரும் வழியில் டிராபிக் போலீஸ் தடுத்து நிறுத்தி இருவரையுமே செக் பண்ணார்கள். ஆனால், மனோஜ் போதையில் போலீஸ் இடமே தகராறு செய்து கொண்டிருந்தார். மனோஜின் நண்பர் குடிக்கவில்லை என்றாலும் போலீஸ் அவரை ஊத சொல்லி கேட்டார்கள். இதனால் கோபப்பட்ட மனோஜ் போலீஸிடம் சண்டை போனார். பின் போலீஸ், மனோஜை கைது செய்து விட்டார்கள்.

நேற்று எபிசோட்:
போலீஸ் ஸ்டேஷனிலுமே மனோஜ் அமைதியாக இருக்காமல் போலீஸிடம் மன்னிப்பு கேட்க சொல்லி வம்பு இழுத்துக் கொண்டிருந்தார். உடனே அவர்கள் கோபத்தில் மனோஜின் சட்டையை கழட்டி ஓரமாக உட்கார வைத்து விட்டார்கள். ஆனாலுமே மனோஜ் அடங்காமல், என் தம்பி யார் தெரியுமா? அவன் வந்தால் ரகளையே நடக்கும் என்றெல்லாம் அலப்பறை செய்து கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் மனோஜ் வீட்டிற்கு வரவில்லை என்று முத்து, அண்ணாமலை இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் ரோகினி, மனோஜை நினைத்து வித்யாவிடம் புலம்பி கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் விஷயத்தை அவருடைய நண்பர், முத்து- அண்ணாமலை இடம் சொன்னவுடன் வீட்டில் எல்லோருமே பதறுகிறார்கள். பின் முத்து- அண்ணாமலை இருவருமே போலீஸ் ஸ்டேஷன் வருகிறார்கள். அங்கு மனோஜ் போலீஸ் இடம் அலப்பறை செய்து கொண்டிருக்கிறார். இதை பார்த்து மன வேதனையில் அண்ணாமலை, குடும்ப பிரச்சனையால் தான் அவன் இப்படி பண்ணி விட்டான் என்று மன்னிப்பு கேட்கிறார். அந்த சமயம் பார்த்து அருண் வருகிறார். அருணை பார்த்தவுடன் முத்து ஷாக் ஆகிறார்.

சீரியல் ட்ராக்:
முத்துவின் அண்ணன் தான் மனோஜ் என்று தெரிந்தவுடன் வெளியே விடக்கூடாது என்று அருண் நினைக்கிறார். உடனே அங்கு வந்து எஸ் ஐ, மனோஜை வெளியே விட சொல்கிறார். அதற்கு பின் வீட்டிற்கு வந்த மனோஜ் மீண்டும் அலப்பறை செய்து கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து அண்ணாமலைக்கு ரொம்பவே மனவேதனையாக இருந்தது. பின் அவர், நான் என் அம்மாவை வரவைக்கிறேன். இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுகிறேன் என்று தன்னுடைய அம்மாவை அழைத்து வர செல்கிறார். இன்னொரு பக்கம் பஸ் ஸ்டாண்டில் சீதா, நின்று கொண்டிருக்கிறார். அவரை பார்த்தவுடன் அருண், என் காதலுக்கு எப்போதுதான் பதில் சொல்லுவாய்? நீ என் பைக்கில் வந்து ஏறினால் நீ என்னை காதலிக்கிறாய் என்று அர்த்தம் என்று காத்துக் கொண்டிருக்கிறார். சீதாவும் பைக்கில் ஏறி செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






