-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

மனோஜ் செய்த பித்தலாட்ட வேலையை அறிந்த முத்து, பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குடும்பம்- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

0
60

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகினியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. உண்மையில் அவர் பணக்கார குடும்பமே இல்லை.

-விளம்பரம்-

அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. சீரியலில் ரோகினி மீது முத்துவிற்கு சந்தேகம் அதிகம் ஆகிறது. இன்னொரு பக்கம் ரூம் பிரச்சனை வந்ததால் வீடு கட்டுவது குறித்து அண்ணாமலை யோசித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவர், அனைவரிடமும் மாதம் நீங்கள் எவ்வளவு காசு கொடுப்பீர்கள் என்று கேட்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொகையை சொல்கிறார்கள். இந்த விவகாரம் ஸ்ருதி அம்மாவிற்கு தெரிந்தவுடன் முத்து வீட்டிற்கு வந்து அவர் சகுனி வேலை செய்கிறார்.

சிறகடிக்க ஆசை :

இதனால் மனோஜ், முத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அடிதடி அளவிற்கு சண்டை ஏற்படுகிறது. பின் முத்துவை எல்லோருமே திட்டுகிறார்கள். இதனால் முத்து மன வேதனையில் குடித்து எல்லாத்தையும் புலம்பி பேசுகிறார். இறுதியில் முத்து சவாரி சென்ற இடத்திலிருந்து செங்கல் வாங்கி வருகிறார். அதை மீனாவிடம் காண்பிக்கிறார். இதைப் பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே கிண்டல் செய்கிறார்கள். பிறகு மாடியில் மீனாவும் முத்துவும் கொண்டு வந்த செங்கல்களை அடுக்கி வைத்து அழகு பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார்கள்.

சீரியல் ட்ராக்:

-விளம்பரம்-

அதன் பின் ஞாயிற்றுக்கிழமையின் ஸ்பெஷல் எபிசோட்டில், மனோஜ் கடையில் பெரிய ஆர்டர் வந்ததால் லட்சக்கணக்கில் பொருள்களை விற்று விடுகிறார். ஆனால், அவர்கள் கொடுத்த பணம் கள்ளப்பணம் என்று தெரிகிறது. அதையும் ஏமாற்றி விடுகிறார்கள். இதை விஜயாவிடம் சொல்லி அழுகிறார். விஜயாவும் மீனாவின் நகையை அடமானம் வைத்து கொள் என்று கூறுகிறார். ஆனால், மனோஜ் அடமானம் வைக்காமல் விற்று விடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் முத்து, மீனா உடைய நகையை கொடுங்கள் என்று அண்ணாமலை இடம் கேட்கிறார்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

முத்து, மீனா நகை வேண்டும் என்று கேட்டவுடன் அண்ணாமலையும் விஜயாவிடம் பேசி கொடுத்து விடுகிறார். ஆனால், கவரிங் நகையை தான் மனோஜ் ரெடி பண்ணி தன்னுடைய அம்மாவிடம் கொடுக்கிறார். யாருக்கும் அந்த உண்மை தெரியாது. அந்த நகையை மீனாவும் நகைக்கடையில் காண்பிக்கிறார்கள். அது கவரிங் என்று தெரிந்தவுடன் அதிர்ச்சி ஆகிறார்கள். இது பற்றி தன் அப்பாவிடம் கேட்க முத்து நினைக்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், மனோஜ் தான் இந்த வேலையை செய்திருப்பான். இதற்கு என்னுடைய அம்மாவும் உடனடியாக இருப்பார் என்று முத்து கண்டுபிடித்து வருகிறார்.

இன்றைய எபிசோட்:

மீனா, இதை வீட்டில் கேட்க வேண்டாம். பாட்டியின் பிறந்தநாள் முடிந்தவுடன் கேட்டுக் கொள்ளலாம் என்று சத்தியம் வாங்கி விடுகிறார். வீட்டில் பாட்டியின் பிறந்தநாளுக்கு ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கிறார்கள். வழக்கம் போல் விஜயா, மீனாவை திட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் கோபத்தில் முத்து எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இதெல்லாம் பார்த்து மனோஜ்க்கு சந்தேகம் வருகிறது. பின் ஒவொரு ஜோடியும் என்ன பரிசு வாங்கி கொடுப்பது குறித்து பேசி கொண்டு இருக்கிறார்கள். இனிவரும் நாட்களில் முத்துவிடம் மனோஜ் மாட்டி கொள்வாரா? பாட்டி பிறந்தநாளுக்கு முத்து- மீனா கொடுக்கும் பரிசு என்ன? அண்ணாமலை என்ன முடிவெடுக்கப் போகிறார்? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news