விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஸ்ருதி- ரவி வேலை செய்யும் ஹோட்டலில் நீத்து, youtube ரிவியூவர் வருகிறார். நம்முடைய ஓட்டலில் சாப்பிட்டு விட்டு ரிவ்யூ கொடுத்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்று சொன்னவுடன் எல்லோரும் பரபரப்பாக வேலை செய்தார்கள். அப்போது வந்த மீனா, நன்றி சொல்லும் விதமாக சுருதி, ரவிக்கு வாழைப்பூ வடை, பூசணியில் ஸ்வீட் செய்து தந்தார். அதற்குப்பின் வந்த ரிவியூவருக்கு மீனா செய்த சாப்பாட்டை சுருதி கொடுத்தார். அதை வர் சாப்பிட்டு ரொம்பவே பாராட்டி ஹோட்டலை பற்றி ரிவியூ சொல்லியிருந்தார். சந்தோஷத்தில் நீத்து அவர்களுக்கு பணத்தை பரிசாக கொடுத்தார். பின் இதை வீட்டில் சுருதி, ரவி இருவரும் சொல்லி மீனாவிற்கு பணத்தை கொடுத்து சந்தோஷப்பட்டார்கள்.

பார்வதியை சந்தித்த ரோகினியை, எப்படியாவது மனோஜ்-என்னையும் சேர்த்து வையுங்கள் என்று பேசி இருந்தார். அந்த சமயம் பார்த்து விஜயா வீட்டிற்கு வருவதால் ரோகினி ஒளிந்து கொண்டார். அப்போது விஜயா, நீ கேரளா மந்திரவாதியை வரவை. வசியம் வைத்து ரோகினி-மனோஜ் இருவரையும் பிரிக்கணும். நான் நல்ல பணக்காரப் பெண்ணா பார்த்து என் மகனுக்கு கல்யாணம் செய்யணும் என்று சொன்னார். இதை கேட்டவுடன் ரோகினிக்கு பயங்கர கோபம் வந்தது. உடனே பார்வதி, விசாரித்து சொல்கிறேன் என்று ஏதோ பேசி விஜயாவை அனுப்பி விட்டார். அதற்குப்பின் ரோகினி, அந்த கேரளா பூசாரியின் நம்பரை எனக்கு கொடுங்கள்.
சிறகடிக்க ஆசை:
அவர் மந்திரம் பலிக்காத மாதிரி நான் செய்கிறேன் என்று சொன்னார். இன்னொரு பக்கம் வித்யாவை காதலிக்கும் முருகன், புதிதாக வீடு வாங்குவதற்கு அவரை அழைத்தார். அப்போது வித்யா, நான் என்னுடைய காதலுக்கு உதவியவரை அழைத்து வருகிறேன் என்று சொன்னார். இன்னொரு பக்கம் மீனா, பணத்தை ஏமாற்றிய கதிரை பார்த்து பாலோ செய்தார் ஆனால், அவர் எப்படியோ தப்பித்து விட்டார். அதற்குப்பின் மீனா, வித்யாவை சந்தித்து பேசி இருந்தார். அப்போது வித்யா, மீனாவை வெளியே கூப்பிட்டார். அதற்கு அவர், நானும் வருகிறேன். இருந்தாலும் உங்கள் தோழி ரோகினியை வரவையுங்கள் என்று அறிவுரை சொல்லிவிட்டு சொன்னார். அதற்கு பின் வீட்டுக்கு வந்து ரோகினி, வீட்டுக்கு மீனா வந்ததை பற்றி கேட்டு கோப்பட்டார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் பார்வதி, விஜயா இருவருமே வசியம் பண்ண சாமியாரை பார்க்க போனார்கள். அங்கு விஜயா, என் மகன், மருமகளையும் பிரிக்கணும். அவள் எங்கள் வீட்டிற்கு நிறைய பிரச்சனை செய்தார் என்று இல்லாதது பொல்லாதது எல்லாம் ரோகினியை பற்றி சொல்லி மந்திரச்ச கயிறு ஒன்றை வாங்கிக் கொண்டார். அதற்குப்பின் விஜயா, ரோகினி- மனோஜ் பிரித்தவுடன் முத்து-மீனாவையும் பிரிக்கணும் என்று சொன்னார். உடனே பார்வதி, இது தேவையில்லாத வேலை. அவர்களை எதற்கு பிரிக்கணும், அதெல்லாம் செய்யாதே என்று திட்டி இருந்தார். அதற்குப்பின் அதே சாமியாரை பார்க்க ரோகினி வந்தார்.

சீரியல் ட்ராக்:
அவர், என்னையும் என் புருஷனையும் என் மாமியார் பிரிக்க பார்த்தார். அவரையும் அவர் அம்மாவையும் பிரிக்கணும் என்று ரொம்ப எமோஷனாக பேசினார். உடனே அந்த சாமியார் ஒரு மந்திரத்தை கயிறை கொடுத்தார். இன்னொரு பக்கம் முத்துவை பார்க்க முருகன் வந்தார். வரும் வழியில் அவர் ரோகினி ஏமாற்றிய கதிரை அழைத்துக் கொண்டு வந்தார். கதிர், முத்து கண்ணில் படவில்லை. கடைசியில் விஜயா, கயிறை சாமி ரூமில் வைத்து இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த முத்து, சாமி ரூமில் இருக்கும் கயிறை பார்த்து அண்ணாமலைக்கு கட்டி விட்டார். அப்போது விஜயா, இந்த கயிறை எதற்கு கட்டினீர்கள்? இது மனோஜ்க்கு வாங்கினது என்று ஏதேதோ சொல்லி சமாளித்தார். ஆனால், முத்து- அண்ணாமலை விடாமல் பதில் கொடுத்தார்கள். விஜயாவால் எதுவுமே சொல்ல முடியவில்லை.
https://www.youtube.com/watch?v=jyaIHKWKoec
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மனோஜ், அயன் பாக்ஸில் சூடு வைத்துக் கொள்கிறார். உடனே அவர், இங்கு எதற்கு வைத்தாய்? அறிவில்லையா? என்று ரோகினி இடம் சண்டை போடுகிறார். இதை பார்த்தவுடன் விஜயாவிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதற்குப்பின் உள்ளே வந்த விஜயா, இந்த சின்ன விஷயம் கூட உனக்கு தெரியாதா? என்று ரோகினியை திட்டுகிறார். உடனே மனோஜ், நீங்கள் எதற்கு தேவையில்லாமல் பேசுகிறீர்கள், வெளியே போங்க என்று அவருடைய அம்மாவிடம் கோபப்படுகிறார். இதனால் ரோகினி சந்தோஷப்படுகிறார்.






