விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மாதர் சங்கம், ரோகினியை எதற்காக அடித்தீர்கள் என்றார். விஜயா, இல்லை என்று பொய் சொன்னார். அப்போது அங்கு வந்த ரோகிணி, இவர்கள் தான் என்னை ஆள் வைத்து அடித்தார்கள் என்று நடந்ததை எல்லாம் ஒண்ணுக்கு ரெண்டாக ஏற்றி விட்டார். கோபத்தில் மனோஜ், நாங்கள் அந்த அளவுக்கெல்லாம் அடிக்கவில்லை என்று தன் அம்மாவையே போட்டுக் கொடுத்து விட்டார். விஜயாவும் வேறு வழியில்லாமல் உண்மையை ஒத்துக் கொண்டார். இதனால் மாதர் சங்கம், மனோஜ்- ரோகிணி இருவரையும் சேர்ந்து வாழவிடுங்கள். இல்லை என்றால் உங்களை கோர்ட்டில் சந்திக்கிறேன் என்று மிரட்டி விட்டு சென்றார்.

இதனால் முத்து-மீனா, வக்கீலை சந்தித்து பேசினார்கள். வக்கீலுமே, விஜயா செய்த வேலையை திட்டி மாதர் சங்கத்திடம் பேசி மன்னிப்பு கேட்க சொன்னார். இதை மீனா, விஜயாவிடம் சொன்னார். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி வந்தார். அப்போது சிந்தாமணி, மாதர் சங்கத்திற்கு லஞ்சம் கொடுத்தால் அமைதியாகி விடுவார்கள் என்று சொல்லி தன்னை பணத்தை கொடுத்தார். பின் சுருதி, ரவியின் ரெஸ்டாரண்ட்க்கு மாதர் சங்கத்தை வரவைத்து விஜயா பேசி இருந்தார். அவர்கள் ரோகினிக்கு சப்போர்ட் செய்து தான் பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் விஜயா, தன்னுடைய லஞ்சத்தை பணத்தை அவர் பையில் வைத்து விட்டார். இதையெல்லாம் அவர் வீடியோ ஆதாரமாக எடுத்துக் கொண்டார்.
சிறகடிக்க ஆசை:
மாதர் சங்கம் தலைவி, நீங்கள் இவ்வளவு மோசமானவர்களா? பணத்தை கொடுத்து என்னை விலைக்கு வாங்க நினைக்கிறீர்களா? இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று திட்டி விட்டு செல்கிறார். ரவி-சுருதி இருவரும் விஜயாவின் செயலை கண்டிக்கிறார்கள். பின் இதை அறிந்த அண்ணாமலை கோபப்பட்டு விஜயாவை திட்டுகிறார். பயத்தில் விஜயாவிற்கு என்ன செய்வது என்று புரியவில்லை. பின் முத்து, மீனாவிடம் இந்த பிரச்சனையை எப்படியாவது முடித்து சொல்லி அண்ணாமலை கேட்கிறார். மீனா, மனோஜ் மூலமாக அந்த தலைவியிடம் பேசலாம் என்று சொல்கிறார். பின் மனோஜிடம் இதைப்பற்றி முத்து- மீனா இருவரும் பேசுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
மனோஜ், நான் யாரையும் சந்தித்து பேச முடியாது. யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்று திமிராக பேசுகிறார். முத்துவிற்கு கோபம் தான் வருகிறது அதற்குப்பின் வீட்டிற்கு ஸ்வேதா வருகிறார். அப்போது ஸ்வேதா, மாதர் சங்க தலைவியை பற்றி இப்போதுதான் விசாரித்தேன். அவர்கள் நேரடியாக கோர்ட்டு போக மாட்டார்கள். உங்கள் வீட்டின் முன்பு பெண்களை வர வைத்து பிரச்சாரம் செய்வார்கள். அதற்குப்பின் உங்கள் அம்மாவையும் உங்களையும் கைது செய்வார்கள். அதற்கு பிறகு தான் கோர்ட்டில் கேஸ் நடக்கும் என்றெல்லாம் சொல்கிறார். இதை கேட்டு மனோஜ் பயந்து விடுகிறார்.
https://www.youtube.com/watch?v=Nhe3TvR5M-s
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் முத்து, மீனா, மனோஜ் எல்லோருமே மாதர் சங்கம் தலைவியின் ஆபீஸிற்கு செல்கிறார்கள். அங்கு மாதர் சங்கம் தலைவி, இப்போ என்ன ரோகினி பற்றி குறை சொல்ல போகிறீர்கள் என்கிறார். அதற்கு மனோஜ்,நான் என் வாழ்க்கையின் கடைசி வரையும் வருவாள் என்று நம்பி தான் காதலித்து ரோகினியை திருமணம் செய்து கொண்டேன். ஆனால், எனக்கு அவள்
தந்தது வலியும் வேதனையும் தான். ஒருவன் தோல்வி வலியை கூட தாங்கிக் கொள்வான். ஆனால், துரோகத்தை தாங்கிக்கொள்ள முடியாது என்று ரொம்ப எமோஷனலாக பேசுகிறார்.






