விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சீதாவின் நிலைமையை அறிந்து ஹாஸ்பிடலுக்கு அருண் வந்தார். பின் அருண், தேவையான மெடிசனை எல்லாம் வாங்கிக் கொடுத்தார். இதை பார்த்த முத்து கோவப்பட்டு அருணிடம் சண்டைக்கு போனார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகின்றது. உடனே சீதாவின் அம்மா, அருணையும் அவருடைய அம்மாவையும் கிளம்ப சொன்னார். முத்துவும் கோபப்பட்டு அங்கிருந்து சென்று விட்டார். அதற்கு பின் டாக்டர், சீதாவின் ஆழ்மனதில் கவலை இருந்தது. அதை கண்டுபிடியுங்கள் இல்லையென்றால் அவருக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னார். இதனால் மீனா, அவர் அம்மா இருவருமே ஷாக் ஆனார்கள்.

டாக்டர் சொன்னதை கேட்டு மீனாவும் அவருடைய அம்மாவும் ரொம்பவே பயந்தார்கள். அதற்கு மீனா, நீங்கள் எப்படியாவது என் கணவரிடம் பேசுங்கள். சீதா விருப்பப்படியே திருமணம் செய்து வைக்கலாம் என்று தன்னுடைய அம்மாவிற்கு எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். ஆனால், சீதாவின் கல்யாணத்தால் மீனாவின் வாழ்க்கையில் பிரச்சனை வருமா? என்று தான் மீனா அம்மா பயந்தார். இன்னொரு பக்கம் மனோஜ் பேசுவது விஜயாவிற்கு புரியவில்லை. உடனே ரோகினி, ஷோரூம்க்கு என்னையும் அழைத்துச் செல்வதாக சொல்கிறார் என்றவுடன் விஜயாவால் நம்ப முடியவில்லை. பின் கோபத்தில் விஜயா, மனோஜை திட்டி விட்டு ரோகினி மட்டும் கடைக்கு போக சொன்னார்.
சிறகடிக்க ஆசை:
அதற்குப்பின் மீனா, சீதா ஹாஸ்பிடல் இருக்கும் விஷயத்தை அண்ணாமலை இடம் சொன்னார். அவருமே அதிர்ச்சியாகி சீதாவிற்கு பிடித்த மாப்பிள்ளையை திருமணம் செய்து வைக்கலாம் என்று சொன்னார். அதற்குப்பின் முத்து வெளியிலேயே சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்து சாப்பிட்டார். இதனால் முத்து-மீனா இடையே வாக்குவாதம் அதிகமானது. இதை பார்த்து அண்ணாமலை, சீதாவின் திருமணத்தை பற்றி முத்துவிடம் பேசினார். உடனே முத்து, நான் அங்கிருந்த போலீஸிடம் விசாரித்தேன். அருண் சரி இல்லை. பழிவாங்கும் எண்ணம் நிறைய வைத்திருக்கிறான் என்றெல்லாம் சொன்னார். மீனா, அருணுக்கு தான் சப்போர்ட் செய்து பேசி இருந்தார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் அண்ணாமலை எவ்வளவு எடுத்து சொல்லியுமே முத்து கேட்கவில்லை. அவருடைய முடிவில் பிடிவாதமாக இருந்தார். இதனால் மீனா விடம் அண்ணாமலை, நான் முத்துவிடம் எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறேன். நீ கவலைப்படாதே என்று ஆறுதல் சொன்னார். அதற்கு பின் வீட்டிற்கு வந்த ரோகினி, இன்று கடையில் நல்ல பிராஃபிட் கிடைத்தது. பழைய பொருட்களுக்கு புதிய பொருட்கள் என்று சொல்லிருந்தேன். நிறைய லாபம் கிடைத்தது என்று சொன்னார். இதைக் கேட்டு விஜயா, மனோஜ் ஷாக் ஆனார்கள். உடனே அண்ணாமலை, எதுவாக இருந்தாலும் நியாயமாக செய்யணும். ஏமாற்றி எதுவும் பண்ணக்கூடாது என்று அறிவுரை சொன்னார்.
சீரியல் ட்ராக்:
அதற்கு பின் ரோகினி, நாங்கள் இருவரும் சேர்ந்து கடைக்கு போகிறோம் என்றவுடன் விஜயா ஒற்றுக்கொண்டார். அடுத்த நாள் மீனா, சீதா வேலை செய்யும் இடத்திற்கு சென்று ஆறுதல் சொல்லிக் கொண்டிரு ந்தார். பின் முத்து காரில் வந்து கொண்டிருக்கும்போது ஒரு பெண் விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அம்மா அழுது கொண்டிருந்தார். உடனே அவரை, சீதா வேலை செய்யும் ஹாஸ்பிடலுக்கு முத்து அழைத்து வந்தார். அப்போது அந்த அம்மா, அவளுடைய காதலுக்கு சம்மதம் சொல்லி இருந்தால் இந்த நிலைமை என் மகளுக்கு வந்திருக்குமா? என்று அழுது கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து முத்து மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=CeaQ9Xvif08
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் விஷம் குடித்த அந்த பெண்ணை மருத்துவர்கள் காப்பாற்றி விடுகிறார்கள். பின் அந்த பெண்ணினுடைய அம்மா முத்துவிடம், என் மகளை காப்பாற்றியதற்கு ரொம்ப நன்றி. தயவு செய்து என் மகனுக்கு எடுத்து சொல்லி புரியவையுங்கள். அந்த பையனுக்கு அவளை கல்யாணம் செய்து வைக்க கொள்ள அவனிடம் சொல்லுங்கள் என்று சொல்கிறார். இதைக் கேட்டவுடன் மீனா, நீங்கள் சொன்னால் தான் சரியாக இருக்கும். உங்கள் வாயால் அந்த பொண்ணையும் பையனையும் கல்யாணம் செய்து வைக்க சொல்லுங்கள் என்றவுடன் முத்து, மீனாவை முறைக்கிறார்.






