விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சத்யாவின் வீட்டிற்கு வந்த ரேகா, எனக்கு உங்களை ரொம்ப பிடித்திருக்கிறது. நான் காதலிக்கிறேன், நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம். உங்களுடைய முடிவை சொல்லுங்கள் என்றார். சத்யாவிற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. டைம் வேண்டும் என்று சொன்னார். இன்னொரு பக்கம் விஜயா- மனோஜ் இருவரும் ரூம் வேண்டும் என்று பிரச்சனை செய்து கொண்டிருந்தார்கள். இதனால் அண்ணாமலை மீண்டும் திட்டி விட்டார். அப்போது மீனா, ரோகினி கிருஷை பார்க்க சொன்ன விஷயத்தைப் பற்றி சொன்னார்.

கொந்தளித்த விஜயா மீண்டும் மீனாவிடம் சண்டைக்கு போனார். அண்ணாமலை, இதில் ஏதாவது பிரச்சனை இருக்கிறது. கிரிஷை வேறு வழியில் சந்திக்கலாம். ரோகினி வீட்டிற்கு போக வேண்டாம் என்றார். இன்னொரு பக்கம் நீத்துவை சந்திக்க சுருதியின் அப்பா- அம்மா இருவரும் போனார்கள். நீத்து வழக்கம் போல ரவியை காதலிப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார். கோபத்தில் ஸ்ருதியின் அப்பா, இந்த ஊரை விட்டு சென்று விடு. என் மகளின் வாழ்க்கையில் தலையிடாதே என்றெல்லாம் மிரட்டினார். அதற்கு எல்லாம் பயப்படாமல் நீத்து சவால் விட்டார். இன்னொரு பக்கம் ரோகினியை சந்தித்த சிந்தாமணி, கிரிஷுக்கு மனோஜ் ஞாபகம் இருப்பதாக சொல்லி மனோஜை உன் பக்கம் கொண்டு வா என்றார்.
சிறகடிக்க ஆசை:
இன்றைய எபிசோட்டில் சிந்தாமணி, ரோகினியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து சத்யா, ரோகினியின் வீட்டிற்கு வந்துவிடுகிறார். உடனே சிந்தாமணி ஒளிந்து கொள்கிறார். அப்போது சத்யா, அக்கா- மாமா இருவரும் கிரிஷிடம் பேச வேண்டும் என்று சொன்னார்கள். அதனால் தான் வீடியோ காலில் காண்பிக்க வந்தேன் என்று சொல்கிறார். பின் வீடியோக்களில் முத்து-மீனா இருவரும் கிரிஷிடம் பேசுகிறார்கள். இன்னொரு பக்கம் மனோஜ் தூக்கத்திலேயே ரோகிணியிடம் பேசிக் கொண்டிருப்பது போல கனவு காண்கிறார். ரோகினின் பெயரை சொல்லிக் கொண்டிருப்பதால் கோபத்தில் விஜயா, மனோஜை அடித்து எழுப்புகிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் ரூம் கிடைத்ததால் முத்து ஃபர்ஸ்ட் நைட் செட்டப்பில் ரூமை தயார் செய்து வைத்திருக்கிறார்.
முத்து-மீனா இருவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். பின் மனோஜின் மொபைலுக்கு ஒரு வீடியோ வந்திருக்கிறது. அதில் ரோகினி, மனோஜ் இருவரும் சேர்ந்து நடனமாடியது போல இருக்கிறது. அதை விஜயா பார்த்து கோபப்படுகிறார். பின் மனோஜிடம் விசாரிக்கிறார்., அது ai வீடியோ. நான் ஆடவில்லை என்று சொல்கிறார். இருந்தாலும் விஜயா நம்பவில்லை. மனோஜை புரட்டி எடுத்து அடிக்கிறார். பின் இதைப்பற்றி முத்துவிடம் விஜயா சொல்கிறார்.
https://www.youtube.com/watch?v=fxC9jVOZeqU
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மனோஜ் ரூமை முத்து-மீனாவிற்கு கொடுத்து விடுகிறார்கள். முத்து ஃபர்ஸ்ட் நைட் செட்டப்பில் ரூமை ரெடியாக தயார் செய்து வைத்திருக்கிறார். முத்து- மீனா இருவரும் ரூமுக்குள் இருப்பதால் மனோஜ் பயங்கரமாக கோபப்பட்டு கொந்தளிக்கிறார். பின் ரூமில் முத்து-மீனா இருவரும் சந்தோஷமாக பாட்டு பாடி தங்களுடைய வாழ்க்கையை தொடங்குகிறார்கள்.






