விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் வீட்டில் எல்லோருமே ஆட்டம் பாட்டம் என்று சந்தோஷமாக இருந்தார்கள். ஆனால், மீனா மட்டும் சோகமாக இருந்தார். இதை கவனித்த பாட்டி, என்னவென்று விசாரித்தார். அப்போது மீனா, கோவிலில் சாமியாடி சொன்ன விஷயத்தை எல்லாம் சொன்னார். உடனே பாட்டில், அந்த சாமியாடி ரெண்டு மாதத்திற்கு முன்புதான் ஊருக்கு வந்தார். ஆனால், அவர் சொன்ன விஷயங்கள் எல்லாம் அப்படியே நடக்கிறது என்றார். இதை கேட்டு மீனாவிற்கு இன்னும் பயமாக இருக்கிறது.

அந்த சமயம் பார்த்து மீண்டும் சாமியாடி மீனாவை தேடி வீட்டிற்கு வந்து விட்டார். அப்போது சாமியாடி, ரோகிணியை பார்த்து முறைத்தார். பின் மீனாவைப் பார்த்து இங்கு இருக்காதே, கிளம்பி விடு, அவளை கூட்டிட்டு போ என்றெல்லாம் சொல்லி கொண்டிருந்தார். இதனால் மீனாவிற்கு இன்னும் பயமாகிறது. பாட்டியுமே என்ன நடக்கப்போகிறதோ என்று கவலையில் இருந்தார். அதற்குப் பின் மறுநாள் காலையில் எல்லோரும் தீபாவளிக்காக தயாராகி கோவிலுக்கு சென்றார்கள். இன்னொரு பக்கம் தன்னுடைய கணவருக்கு திதி கொடுப்பதற்காக லட்சுமி, ரோகினிக்கு போன் செய்து வர வைத்தார்.
சிறகடிக்க ஆசை:
லட்சுமி, இவள் தான் என்னுடைய ஒரே மகள் கல்யாணி. அவருடைய மகன் தான் கிரிஷ் என்று ஐயரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதை அந்த பக்கம் வந்த மீனா கேட்டு விடுகிறார். பின் ரோகினி சொன்ன பழைய கதைகளை எல்லாம் நினைத்து பார்த்து மீனா சாக்கில் இருக்கிறார். மீனாவிற்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டதை ரோகிணி பார்த்து பயப்படுகிறார். பின் கோபத்தில் மீனா பளார் என்று அறைய ரோகிணி கீழே போய் விழுகிறார். ரோகினி, காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு வீட்டில் சொல்ல வேண்டாம் என்று கதறுகிறார்

சீரியல் ட்ராக்:
மீனா, உன்னை மாதிரி என்னால் குடும்பத்திற்கு துரோகம் செய்ய முடியாது. இவ்வளவு பொய்யா? உன்னிடம் உண்மையே இல்லையா? என்று பயங்கரமாக வெளுத்து வாங்குகிறார். லக்ஷ்மி தன் மகளுக்காக சப்போர்ட் செய்து பேசுகிறார். ஆனால் மீனா அவர்களையும் திட்டி விடுகிறார். கடைசியில் மீனா, நான் உண்மையை வீட்டில் சொல்லத்தான் போகிறேன் என்கிறார். அப்போது ரோகினி, நீ உண்மையை சொன்னால் நான் செத்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.
https://www.youtube.com/watch?v=jkUxC5ykDwI
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் க்ரிஷ், மீனா ஆன்ட்டி அம்மாவை எதற்காக அடித்தார் என்று கேட்கிறார். லட்சுமி, மீனாவுக்கு தெரிந்த உண்மை மொத்த வீட்டிற்கும் தெரிந்தால் என்ன நடக்கும் என்று பதறிக் கொண்டிருக்கிறார். அந்த பக்கம் வந்த முத்து, லட்சுமி- கிரிஷ் இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். அவர்களை பார்த்தவுடன் ரோகிணி ஷாக் ஆகிறார். மீனாவுமே முறைத்துக் கொண்டு இருக்கிறார்.






