Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Muyh876
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.08.02பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ரோகினியின் முகத்திரையை கிழித்த மீனா, வெளுத்து வாங்கிய அண்ணாமலை - சிறகடிக்க ஆசை

எழுதியவர்subhashini2 ஆகஸ்ட், 2025 அன்று 11:16 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சிட்டிக்கு போன் செய்த ரோகினி, ரதி- தீபன் விஷயத்தைப் பற்றி சொல்லி உதவி கேட்டார். அதற்கு சிட்டி, எனக்கு ஏசி, பிரிட்ஜ் வேண்டும். சும்மா எல்லாம் வேலை செய்ய முடியாது என்று சொல்வதால் ரோகினியுமே ஒத்துக்கொண்டார். மறுநாள் காலையில் ரோகினி, எனக்கு தெரிந்த ஒருவரின் மூலம் தீபன் வீட்டில் பேச சொல்லி இருக்கிறேன் என்று மனோஜிடம் சொன்னார். அப்போது பிசினஸ் டெவலப்பாக ராணி, ராஜா இருவருமே சேர்ந்து மனோஜ்க்கு ஐடியா கொடுத்தார்கள். அதற்கு ரோகினியும் சம்மதித்தார். இன்னொரு பக்கம் தீபன் வீட்டிற்கு சென்ற முத்து, பணமெல்லாம் கொடுக்க முடியாது என்றார்.

ரோகினியின் முகத்திரையை கிழித்த மீனா, வெளுத்து வாங்கிய அண்ணாமலை - சிறகடிக்க ஆசை

இதைக் கேட்ட தீபன் வீட்டில் உள்ளவர்கள் ரொம்ப மோசமாக பேசி திட்ட, கோபத்தில் முத்துவுமே திட்டி விட்டு வந்தார். இதை பார்த்து சிட்டியின் ஆட்கள் முத்துவின் பெயரை சொல்லி தீபன் குடும்பத்தை அடித்து விட்டார்கள். இது தெரியாமல் வீட்டிற்கு வந்த முத்து, தீபன் வீட்டில் பேசிவிட்டேன். பணமெல்லாம் கொடுக்கத் தேவையில்லை. நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார். அந்த சமயம் பார்த்து வீட்டுக்கு வந்த போலீஸ் முத்துவை கைது செய்தார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே பதறினார்கள். அப்போது போலீஸ், முத்து அடியாட்களை வைத்து தான் தீபன் வீட்டில் பிரச்சனை செய்திருக்கிறார் என்று சொன்னார்கள். முத்து நான் எந்த தவறும் செய்யவில்லை என்று சொன்னார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் போலீஸ் முத்துவை கைது செய்து சென்று விட்டார்கள். அண்ணாமலை, மீனா எவ்வளவு சொல்லியும் போலீஸ் கேட்கவில்லை. ரோகினி உள்ளுக்குள் சந்தோஷப்பட்டார். பின் மீனா தனக்கு தெரிந்தவர்கள் மூலம் முத்துவை வெளியே எடுக்க போராடிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் முத்து கைதானதை அறிந்த அருண் உள்ளுக்குள் சந்தோசப்பட்டு வெளியில் நல்லவன் போல நாடகமாடினார். பின் அருண் வீட்டிற்கு சென்ற மீனா, நடந்ததை சொல்லி உதவி கேட்டார். அதற்கு அருண், இது கொஞ்சம் கஷ்டம் என்றார். பின் மீனா, ரதியை சந்தித்து நடந்ததை பற்றி சொன்னார்.

ரோகினியின் முகத்திரையை கிழித்த மீனா, வெளுத்து வாங்கிய அண்ணாமலை - சிறகடிக்க ஆசை

நேற்று எபிசோட்:

பின் ரதி, தீபனுக்கு போன் செய்து அங்கு நடந்ததை பற்றி விசாரித்தார். அப்போது தீபன், அடித்தவுடன் சிட்டி பெயரை சொன்னான். உடனே மீனாவுக்கு இது சிட்டி செய்த வேலைதான் என்று தெரிந்து கொண்டார். பின் இதைப் பற்றி மீனா போலீஸிடம் சொன்னார். சிட்டியை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தார்கள். அப்போது வலி தாங்க முடியாமல் சிட்டி, இது எல்லாம் செய்ய சொன்னது ரோகிணி தான். எனக்கும் அவங்களுக்கும் சின்ன சின்ன டீலிங் இருக்கு என்று சொன்னார். இதை கேட்டவுடன் மீனா-முத்து இருவரும் ஷாக் ஆனார்கள். சிட்டி குருப்பை போலீசார் கைது செய்தார்கள். பின் முத்துவை விடுதலை செய்தார்கள்.

ரோகினியின் முகத்திரையை கிழித்த மீனா, வெளுத்து வாங்கிய அண்ணாமலை - சிறகடிக்க ஆசை

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் போலீஸ் ரோகினியை அழைத்து வரச் சொல்லிகிறார்கள். கோபத்துடன் வீட்டிற்கு வந்த மீனா, என் வீட்டுக்காரரை கைது செய்யும் போது கூட உண்மையை சொல்லவில்லை. நீங்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொள்வீர்கள் என்று எனக்கு தெரியாது என்று கத்துகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே என்ன ஆனது? என்று கேட்கிறார்கள். அதற்கு மீனா, என் கணவர் கைதானத்திற்கு காரணம் ரோகினி தான் என்று சொல்கிறார். உடனே ரோகினி, நான் எதுவுமே செய்யவில்லை. என் மீது பழி போடாதீர்கள் என்று சொல்ல, மனோஜும் ரோகினிக்கு சப்போர்ட் செய்கிறார். அப்போது மீனா, நடந்ததை எல்லாம் சொல்கிறார். இதை கேட்டவுடன் ரோகினிக்கு ஷாக் ஆகிறது. அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த போலீஸ், ரோகினி செய்த வேலையை சொல்கிறார்கள்.

ரோகினியின் முகத்திரையை கிழித்த மீனா, வெளுத்து வாங்கிய அண்ணாமலை - சிறகடிக்க ஆசை

சீரியல் ட்ராக்:

இதை கேட்டு மொத்த குடும்பமும் ஷாக் ஆகிறது. பின் வீட்டில் உள்ள எல்லோருமே ரோகினியை திட்டுகிறார்கள். பின் போலீசும் ரோகினியை கைது செய்து செல்கிறார்கள். போலீஸ் ஸ்டேஷனில்
ரோகினி, நான் எந்த தவறும் செய்யவில்லை. சிட்டி எனக்கு தெரிந்தவர் என்பதால் தான் அவரிடம் பேச சொன்னேன். ஆனால், அவரை நான் அடிக்க சொல்லவில்லை என்று சிட்டி பக்கம் திருப்புகிறார். போலீஸ் ரோகினியை திட்டி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஏதாவது நடந்தால் மர்டர் கேஸ் போடுவேன் என்று சொல்கிறார். சப்போர்ட் செய்த மனோஜையும் இந்த கேசில் இழுத்து கொள்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

தலைப்புகள்
#சிறகடிக்க ஆசை லேட்டஸ்ட்#சிறகடிக்க ஆசை#Siragadikka Aasai#Siragadikka Aasai Latest Episode
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement