விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஏற்று கொண்டார். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. கடந்த வாரம் சீரியலில் மனோஜ் பணத்தை ஏமாற்றி சென்ற ஜீவா இந்தியாவிற்கு மீண்டும் வருகிறார். பின் மனோஜிடம் ஜீவா வசமாக மாட்டிக் கொள்கிறார். அவர் மீது போலீசிலும் புகார் அளிக்கிறார். பின் ஜீவாவிடம் இருந்து பணத்தை மனோஜ்- ரோகினி வாங்கி விடுகிறார்கள். ஆனால், இந்த உண்மையை வீட்டில் மறைக்கிறார்கள். பின் மனோஜ் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை தன்னுடைய அப்பா தான் போட்டார் என்று ரோகினி மாற்றி சொல்லி விடுகிறார்.

Advertisement

சிறகடிக்க ஆசை சீரியல்:

பின் முத்து குடிப்பது போல வீடியோ எடிட் செய்து சோசியல் மீடியாவில் பதிவிடுகிறார் சிட்டி. அந்த வீடியோவால் முத்து ரொம்ப சிரமப்படுகிறார். வீட்டிலும் முத்து சொன்னதை யாரும் கேட்கவில்லை. ஒருவழியாக முத்து மீது எந்த தவறும் இல்லை என்பதை மீனா கண்டுபிடித்து விடுகிறார். பிறகு முத்து தன் காரை வாங்கி விடுகிறார். மனோஜ் வேலைக்கு பர்னிச்சர் கடைக்கு செல்கிறார். ரோகினி- மனோஜ் இருவரும் தங்களுடைய கடைக்கு பெயர் வைப்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது ரோகினி, அத்தை பெயரை வைக்கலாம் என்று சொல்கிறார். மனோஜ், வேணாம் உன்னுடைய அப்பா பெயர் வைக்கலாம் என்று சொல்கிறார். ஒருவழியாக முத்து மிரட்டி தன் அம்மா பெயரை வைக்க சொல்கிறார். புதுக்கடையை மனோஜ் தன்னுடைய அம்மாவை வைத்து திறக்க வைக்கிறார். முதன்முதலில் ஸ்ருதியின் அம்மா இலட்சக்கணக்கில் செலவு செய்து ஒரு பொருளை வாங்கினார். அவருக்கு தான் பில் போடுவேன் என்று மீனாவை அவமானப்படுத்தி சொல்கிறார் மனோஜ். பிறகு மீனாவும் முத்தமும் எதுவும் பேசாமல் அமைதியாக விடுகிறார்கள்.

Advertisement

பின் வீட்டில் ஒரு ஜோடி ஒரு வாரம் வெளியில் படுக்க வேண்டும். மற்ற ஜோடி உள்ளே படுக்க வேண்டும் என்று பாட்டி சொல்கிறார். அதன்படி முத்து மீனாவும் உள்ளே படுக்க வேண்டியது. ஆனால், மனோஜ் கடையில் சோர்வாக இருப்பதால் உள்ளே படுத்து விடுகிறார். எதுவும் பேசாமல் முத்து அமைதியாக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், மீனாவிற்கு உடம்பு சரியில்லாமல் போய்விடுகிறது. இதனால் முத்து அறையில் அவரை படுக்க வைத்து விடுகிறார். அந்த சமயம் பார்த்து மனோஜ் நான் படுக்க வேண்டும், மீனாவை வெளியே போய் சொல் என்று அவருடைய அம்மாவிடம் சொல்கிறார்.

Advertisement

சீரியல் ப்ரோமோ:

உடனே விஜயா, விஜயா மீனாவின் கையை பிடித்து வேகமாக இழுத்து வந்து வெளியே விடுகிறார். இதை முத்து பார்த்து கோபப்படுகிறார். அதற்குப் பிறகு மீனா உடல்நிலை சரியில்லாததால் காலையில் எழுவதற்கு தாமதமாகிறது. இதனால் மீனாவை கோபமாக விஜயா திட்டுகிறார். இதை பார்த்த முத்து, அவரவர்களுக்கு வேண்டியதை அவர்களே செய்து சாப்பிட வேண்டும். உங்களுக்கு மட்டும் தான் அப்பா மீனா சமைத்து தருவார் என்று சொல்லிவிடுகிறார். இதனால் ஆத்திரத்தில் விஜயா இருக்கிறார். இனி வரும் நாட்களில் ரூம் பஞ்சாயத்து முடியுமா? மற்ற மருமகள்களும் சமையல் செய்வார்களா? இதற்கு அண்ணாமலை என்ன தீர்வு கொண்டு வரப் போகிறார்? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement