விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, நீயும் உன் அக்காவும் சேர்ந்தால் சந்தோஷம். எனக்கு எப்போதும் நம் வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோசமாக தான் இருக்க வேண்டும். அதை தான் நானும் செய்வேன் என்றெல்லாம் சொன்னார். இது எல்லாம் கேட்டு சீதா ரொம்ப எமோஷனல் ஆனார். இன்னொரு பக்கம் மனோஜ் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடைக்கு வந்த பாம்பாட்டி, அயன் பாக்ஸ் கேட்டார். அப்போது அவரிடம் இருந்த பாம்பு ரோகிணி எடுத்து வந்த பையில் சென்று விட்டது. பின் ரோகினி, மனோஜ் இருவருமே வீட்டிற்கு வந்தார்கள்.

மீனா, தன் மாமியாருக்கு வைத்த பாலை பாம்பு குடித்தது. ஆனால் விஜயா, மீனாவை திட்டிக் கொண்டிருந்தார். பாம்பு யார் கண்ணுக்குமே தெரியவில்லை. பின் இரவு விஜயா தண்ணி குடிக்க வரும்போது பிரிட்ஜ் பக்கத்தில் பாம்பு இருப்பதை பார்த்து பயங்கரமாக கத்தி அலறினார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே பாம்பு இருப்பதை பார்த்து பயந்தார்கள். அப்போதுதான் பாம்பு வந்த விஷயத்தை அறிந்து மனோஜை திட்டிக் கொண்டிருந்தார்கள். பின் ஒரு வழியாக முத்து அந்த பாம்பை பிடித்து விட்டார்.
சிறகடிக்க ஆசை:
இன்றைய எபிசோட்டில் விஜயா, வீட்டிற்கு பாம்பு வந்த விஷயத்தை பார்வதி- சிந்தாமணி இடம் சொல்கிறார். அப்போது சிந்தாமணி, பாம்பு வீட்டுக்கு வருவது நல்லது இல்லை. குலதெய்வ கோயிலுக்கு சென்று வாருங்கள் என்கிறார். பின் இதைப் பற்றி விஜயா வீட்டில் எல்லோரிடமும் சொல்கிறார். அதற்குப்பின் சுருதி ரெஸ்டாரண்டிற்கு மீனா சென்றிருக்கிறார். அப்போது கோகிலா அந்த ரெஸ்டாரண்டுக்கு வந்திருக்கிறார். பின் கோகிலா, தன்னுடைய தோழியை மீனாவிற்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அப்போது கோகிலா, மீனாவின் பூ வியாபாரத்தை பற்றி தன்னுடைய தோழிக்கு சொல்வதால் அவர்களும் மீனாவை பூ போட சொல்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
அப்போது மீனா, என்னுடைய கணவரின் அண்ணன் கடை வைத்திருக்கிறார். வீட்டுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் நீங்கள் அங்கு எடுத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்கிறார். இதையெல்லாம் கேட்டு சுருதி-கோகிலா இருவருமே மீனாவின் குணத்தை ரொம்பவே பெருமையாக பேசுகிறார்கள். இன்னொரு பக்கம் ஸ்ருதியின் அம்மா, ரோகினிக்கு போன் செய்து பணத்தை கேட்கிறார். ஆனால், ரோகிணி இப்போது அப்போது என்று சமாளிக்கிறார். உடனே ஸ்ருதி அம்மா, பணத்தை கொடுக்கவில்லை என்றால் நான் உன்னுடைய மாமியாரிடமே சொல்லிவிடுவேன் என்று மிரட்டுகிறார். இதனால் ரோகிணி, மனோஜிடம் பணத்தை கேட்கிறார். ஆனால், மனோஜ் முடியாது என்று சொல்கிறார்.
https://www.youtube.com/watch?v=KbhI-xUkmWk
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் ரோகினி, ஒரு பெரிய ஆர்டர் கிடைத்திருக்கிறது. அவர்கள் கட்டும் ஒவ்வொரு வீட்டிற்குமே பொருள்களை எல்லாம் நம்முடைய கடையில் இருந்து தான் எடுத்துக் கொண்டு போகிறார்கள். எனக்கு தெரிந்தவர்கள் மூலம் அந்த ஆர்டர் கிடைத்திருக்கிறது என்று சொல்கிறார். மனோஜ், இதன் மூலம் நமக்கு 40 லட்சம் லாபம் கிடைக்கும் என்று சொன்னவுடன் விஜயா வாயை பிளக்கிறார். இதை எல்லாம் பார்த்த ஸ்ருதிக்கு கடுப்பாக இருக்கிறது. பின் சுருதி, இது ' மீனா உங்களுக்கு கொடுத்த ஆர்டர். ஆனால், நீங்கள் வாங்கியது போல பெருமை பேசிக்கொள்கிறீர்கள் என்று கேட்கிறார். ரோகினி, அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் திமிராக அங்கிருந்து செல்கிறார்.






