விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், கிரிஷ் இந்த வீட்டில் இருக்கணுமா? இல்லையா? என்பதை ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கலாம். யாரெல்லாம் இந்த வீட்டில் கிரிஷ் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டார். முத்து, மீனா, அண்ணாமலை மூவருமே கை தூக்கினார்கள். ஆனால், சுருதி- ரவி கையை தூக்கவில்லை. அதற்கு பின் கிரிஷ் இங்கு இருக்க கூடாது என்று சொல்லுங்கள் என்றார். அதற்கு விஜயா, மனோஜ் இருவரும் ஓட்டு போட்டார்கள். அவர்களுக்குமே ஸ்ருதி, ரவி கையை தூக்கவில்லை. ரோகினி தூக்கலாமா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து கிரிஷ்க்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

அண்ணாமலை, கிரிஷ் இந்த வீட்டில் தான் இருப்பான். அவன் பாட்டி வரும்வரை எங்கேயும் அனுப்ப முடியாது என்று சொன்னார். இதனால் மனோஜ் பிரச்சனை செய்கிறார். உடனே சுருதி-ரவி இருவருமே கிரிஷுக்கு சப்போர்ட் செய்து பேசுவதால் மனோஜால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்குப்பின் முத்து-மீனா இருவருமே தங்களுக்கு தெரிந்த இடங்களுக்கு சென்று கிரிஷ் பாட்டியை பற்றி விசாரித்து கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் ஸ்கூல் வந்த ரோகினி, தலைமை ஆசிரியரிடம் கிரிஷை தன்னுடன் அழைத்துச் செல்வதால் டிசி கொடுக்க சொல்லி கேட்டார். அவர்களும் ஒத்து கொண்டு கிரிஷுக்கு டிசி கொடுத்து விட்டார்கள்.
சிறகடிக்க ஆசை:
இன்னொரு பக்கம் மீனா, கிரிஷ் பாட்டி கோயிலில் வேலை செய்து கொண்டு அன்னதானம் சாப்பிடும் விஷயத்தை தெரிந்து கொண்டார். பின் ரோகினி, கிரிஷை அழைத்துக் கொண்டு வித்யா வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது ரோகினி, கொஞ்ச நாட்களுக்கு கிரிஷ் இங்கேயே இருக்கட்டும். நான் ஏதாவது ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னார். ஆரம்பத்தில் வித்யா முடியாது என்று வருகிறார் பின் வேறு வழி இல்லாமல் ஒத்துக் கொண்டார். அதோடு வித்யா, ஒரு வாரம் மட்டும் தான் கிரிஷ் இங்க இருக்க நான் ஒத்துக் கொள்வேன். அதற்குப்பின் கிரிஷை அழைத்துக் கொண்டு சென்று விடணும் என்று சொல்வதால் ரோகிணியும் சம்மதிக்கிறார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் க்ரிஷ், வித்யாவுடன் இருக்க மாட்டேன் என்று அழுது கதறினார். ஆனால், ரோகினி கேட்கவில்லை. கிரிஷை வித்யா வீட்டிலேயே விட்டு வந்து விட்டார். இன்னொரு பக்கம் சோகமாக முத்து வீட்டிற்கு வந்தார். அண்ணாமலை, கிரிஷ் எங்கே? என்று கேட்கிறார். அதற்கு முத்து, கிரிஷ் அம்மா டிசி வாங்கிக்கொண்டு சென்று விட்டதாக சொன்னார். இதைக் கேட்டு மீனா ஷாக் ஆனார். மனோஜ் -விஜயா இருவருமே சந்தோஷப்பட்டார்கள். மீனா, எதுவுமே சொல்லாமல் துபாயில் இருந்து வந்து கிரிஷை அவர் அம்மா அழைத்து சென்றது சந்தேகமாக இருக்கிறது. கிரிஷுக்கு பின்னால் ஏதோ மர்மம் இருக்கிறது.

சீரியல் ட்ராக்:
அதை தான் கண்டுபிடிக்கணும் என்று சொன்னார். முத்து, முதலில் கிரிஷ் அம்மாவை கண்டுபிடிக்கணும் என்றார். இதையெல்லாம் கேட்டு ரோகிணி அதிர்ச்சியில் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் கோயிலுக்கு சென்ற மீனா, தன் அம்மாவை பார்த்து கிரிஷ் பற்றி எல்லா விவரத்தையும் சொல்லி வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் விஜயா, பார்வதியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது யோகா வகுப்பு தொடங்க இருப்பதாக விஜயா சொன்னார். அந்த சமயம் வந்த சிந்தாமணி, விஜயாவின் ஐடியாவை பாராட்டினார். பின் மூவருமே யோகா கிளாஸ் தொடங்குவதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
https://www.youtube.com/watch?v=rqqcBmpvOfo
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் யோகா கிளாஸ் தொடங்குவதற்காக விஜயா, பார்வதி, சிந்தாமணி தெரு தெருவாக நோட்டீஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கிரிஸ் பாட்டி வருவதை விஜயா பார்த்து விடுகிறார். இன்னொரு பக்கம் வித்யா வீட்டிற்கு மீனா சென்றிருக்கிறார். அங்கு அங்கிருந்த கிரிஷ், ரோகினி இருவருமே ஒளிந்து கொள்கிறார்கள். அப்போது மீனா, என்னுடைய வண்டி ரிப்பேர். மெக்கானிக்கல் வர வைத்து சரி பண்ணுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். அப்போது கிரிஷ் செருப்பை பார்த்த மீனா, இது கிரிஷ் செருப்பு மாதிரி இருக்கு என்று சொல்கிறார். எதுவுமே சொல்ல முடியாமல் வித்யா அமைதியாக இருக்கிறார்.






