விஜயா தொடங்கிய பரதநாட்டிய கிளாஸ், முதல் நாளே வந்த பிரச்சனை- பரபரப்பில் சிறகடிக்க ஆசை

0
266
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா.

-விளம்பரம்-

உண்மையில் அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஏற்று கொண்டார். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. சீரியலில் மனோஜ் பர்னிச்சர் கடைக்கு ஓனர் ஆகிறார். கடந்த வாரம் ரோகினியின் மகன் கிரஷுக்கு கண்ணில் ஆபரேஷன் செய்து ஹாஸ்பிடலில் இருந்து முத்து வீட்டிற்கு வந்தார்கள். இதனால் பல ப்ரச்சனை வந்தது.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

ஒரு வழியாக கிருஷுக்கு தன் தாய் ரோகினி தான் என்பது தெரிந்து விட்டது. ரோஹினியும் தன் மகனுடன் விளையாடி சந்தோசமாக இருந்தார். அதன் பின் முத்து கிண்டலாக தன் கல்யாணத்தை பற்றி பேசியதை கேட்டு மீனா மனம் உடைந்து விடுகிறார். இது தான் சந்தர்ப்பம் என்று விஜயா, மீனாவை கிண்டல் செய்தார். பின் மீனாவை காணவில்லை என்று முத்து- அண்ணாமலை பதறிக் கொண்டிருந்தார்கள். எங்கெங்கோ முத்துவும் அவருடைய நண்பர் செல்வமும் தேடி அலைந்து இருந்தார்கள்.

சீரியல் கதை:

இறுதியில் முத்து வீட்டிற்கு வந்தார். மீனா, நான் பூ கட்டுவதற்கு போனேன். சுருதி இடம் சொல்லிவிட்டு தான் சென்றேன் என்றார். அதன் பின் ரோஹிணிக்கு தொல்லை கொடுத்த வசீகரனை போலீஸ் கைது செய்கிறது. கடந்த வாரம் விஜயா, மீனாவை திட்டிக் கொண்டிருந்தார். இதை கேட்ட ரோகினி, நீங்கள் பரதநாட்டியம் கிளாஸ் எடுங்கள். அதற்கான ஏற்பாடு செய்து தருகிறேன் என்று சொன்னவுடன் விஜயா சந்தோஷப்படுகிறார். அதற்கான ஏற்பாடுகளையும் ரோகினி- மீனா செய்தார்கள்.

-விளம்பரம்-

விஜயா ஆரம்பித்த வகுப்பு:

நேற்றைய எபிசோட்டில், ஸ்ருதியின் அம்மாவை வைத்து பரதநாட்டிய வகுப்பை தொடங்குகிறார். அதற்கு முத்து கிண்டலாக பேசியிருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் விஜயா ஆரம்பித்த வகுப்பிற்கு யாருமே வரவில்லை. வெளியே போய் பார்த்து பார்த்து பார்வதி, விஜயா இருவருமே சோர்ந்து போய் விட்டார்கள். பின் வகுப்பிற்கு நபர் ஒருவர், இனிமேல் நீங்கள் வாடகை அதிகமாக கொடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டு சென்றார்.

இன்றைய எபிசோட்:

இதை கேட்டு பார்வதி அதிர்ச்சி அடைகிறார். பின் வகுப்பிற்கு வந்த பெற்றோரிடம், இங்கு வகுப்பு நடக்கவில்லை என்று பார்வதி சொல்லிவிடுகிறார். இது எல்லாம் பார்த்து விஜயாவிற்கு கோபம் வருகிறது. பின் வீட்டிற்கு வந்து விஜயா, இன்று யாருமே வரவில்லை. மீனா செய்த வேலைதான் என்றெல்லாம் வழக்கம்போல் மீனாவை திட்டிக் கொண்டிருக்கிறார். இனி வரும் நாட்களில் விஜயா வகுப்பிற்கு மாணவர்கள் வருவார்களா? அவளுடைய எண்ணம் ஈடேறுமா? ரோகினி மாட்டிக் கொள்வாரா? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது

Advertisement