Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Qas
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.11.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அண்ணாமலை விவாகரத்து செய்ய இருக்கிறாரா? முத்து சொன்ன வார்த்தையால் பயப்படும் விஜயா- சிறகடிக்க ஆசை

எழுதியவர்subhashini13 நவம்பர், 2024 அன்று 09:02 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சத்யா மீது விஜயா கம்பளைண்ட் கொடுத்தார். பின் மீனா வீட்டை விட்டு வெளியே போகணும் என்று விஜயா சொன்னதற்கு அண்ணாமலை முடியாது என்றார். உடனே கோபத்தில் விஜயா வீட்டை விட்டு வெளியே போனார். இன்னொரு பக்கம் சிட்டி, பிஏ இருவரும் ரோகினி இடம் பணத்தை பறிக்க திட்டம் போடுகிறார்கள். இந்த வாரம் முத்து, வக்கீலை பார்த்து நடந்ததை சொன்னார். பின் மீனா-முத்து இருவருமே வீட்டிற்கு வந்து அண்ணாமலையிடம் கேஸ் வாபஸ் வாங்க சொல்லி பேசி இருந்தார்கள்.

அண்ணாமலை விவாகரத்து செய்ய இருக்கிறாரா? முத்து சொன்ன வார்த்தையால் பயப்படும் விஜயா- சிறகடிக்க ஆசை

இதனால் அண்ணாமலை விஜயாவிடம் பேச போனார். ஆனால், விஜயா முடியாது என்று மறுத்தார். பின் விஜயா, முத்து- மீனா வீட்டை விட்டு வெளியே போனால் நான் கேசை வாபஸ் வாங்குவேன் என்று சொன்னவுடன் அண்ணாமலை அதிர்ச்சியாகி வந்துவிட்டார். பின் வக்கீல், இது ரொம்ப கிரிட்டிகள் கேஸ். சீக்கிரம் பணத்தை ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னார். அந்த சமயம் பார்த்து சீதாவை வேண்டாம் என்று மாப்பிள்ளை வீட்டில் சொன்னதால் மீனா அம்மா ரொம்ப வருத்தப்பட்டார். நேற்று எபிசோடில் வக்கில், 5 லட்ச ரூபாய் பணத்தை ரெடி பண்ண வேண்டும் என்று சொன்னதால் முத்து மும்முரமாக அலைந்து கொண்டிருந்தார்.

சிறகடிக்க ஆசை:

பின் முத்து, வட்டிக்கு தன்னால் முடிந்தவரை பணத்தை ஏற்பாடு செய்து இருந்தார். இன்னொரு பக்கம் மீனாவின் அம்மாவும் தன்னுடைய கரும்பு மெஷினை விற்க பார்த்தார். உடனே அதை முத்து தடுத்து விட்டார்.
அண்ணாமலையும் தன்னுடைய பங்கிற்கு பணத்தை கொடுத்தார். இதையெல்லாம் வக்கீலிடம் கொடுத்து சத்யாவை காப்பாற்ற சொல்லி கெஞ்சுகிறார்கள் முத்து-மீனா. பின் வக்கீல், விஜயாவை சந்தித்து பேசும்போது அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியில் அவர் பணம் தருகிறோம். சத்யா ஜெயிலுக்கு போவதால் உங்களுக்கு ஒரு லாபம் இல்லை என்று சொன்னவுடன் விஜயா அமைதியாகி இருந்தார்.

அண்ணாமலை விவாகரத்து செய்ய இருக்கிறாரா? முத்து சொன்ன வார்த்தையால் பயப்படும் விஜயா- சிறகடிக்க ஆசை

இன்றைய எபிசோட்:

மேலும், இன்றைய எபிசோடில், நீங்கள் எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள் என்று வக்கீல் கேட்டதற்கு, 2 லட்சம் என்று விஜயா சொன்னார். உடனே வக்கீல் ஒத்துக் கொண்டதால், கேசை வாபஸ் வாங்க விஜயா சம்மதித்தார். பின் இதைப் பற்றி வக்கீல் சொல்ல, முத்துவும் சந்தோஷத்தில் வீட்டில் எல்லோரிடம் சொன்னார்.
எல்லோரும் சந்தோசப்பட, ரோகினி மட்டும் வருத்தப்படுகிறார். விஜயா எப்படி வாபஸ் வாங்கினார் என்று சந்தேகத்தில் ரோகினி இருக்கிறார். பின் முத்து, அம்மாவை வீட்டிற்கு வர சொல்லுங்கள் என்கிறார். ஆனால், அண்ணாமலை அமைதியாக இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

மேலும், கேஸ் வாபஸ் வாங்கின விஷயம் தெரிந்த மீனா அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டு இருந்தார். பின் வீட்டிற்கு சத்யா வந்ததால் முத்துவும் அவருக்கு ஆறுதலாக பேசி படித்து முன்னேற வேண்டும் என்று அறிவுரை எல்லாம் சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் இந்த விஷயம் சிட்டி, கோபப்பட்டு எப்படியாவது சத்யாவை மீண்டும் பிரச்சனையில் மாட்டி விட வேண்டும் என்று யோசிக்கிறார். அப்போது பிஏ வெளியே போக பார்க்கும்போது, ரோகினி இடம் பணத்தை வாங்கும் வரை உள்ளே இரு என்று சிட்டி திட்டி அனுப்பிக்கிறார். பின் ரோகினிக்கு சிட்டி போன் செய்கிறார்.

https://www.youtube.com/watch?v=l_Gw2bl5ydc

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் முத்து, தன்னுடைய மாமியாரின் குடும்பத்தை அழைத்துக் கொண்டு விஜயா இருக்கும் இடத்திற்கு வந்தார். அப்போது அவர், நான் உங்கள் மகனாக வரவில்லை. மருமகனாக வந்திருக்கிறேன் என்று சொல்லி, சத்யாவை மன்னிப்பு கேட்க சொல்கிறார். சத்யாவும் விஜயாவிடம் மன்னிப்பு கேட்க, அவர் எதுவுமே பேசவில்லை. கடைசியில் முத்து, வீட்டுக்கு வர சொல்லி அழைக்க, விஜயா முடியாது என்று மறுத்தார். இப்படித்தான் ஒருவர் தன்னுடைய கணவர் அழைத்தும் வராததால் விவாகரத்து செய்து விட்டார் என்று முத்து சொன்னவுடன், விஜயாவிற்கு பயம் வருகிறது. எங்கோ தன் கணவர் விவாகரத்து செய்து விடுவாரோ? என்று பயத்தில் பார்வதியிடம் புலம்புகிறார்.

தலைப்புகள்
#சிறகடிக்க ஆசை#சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ#siragadikka aasai promo#Siragadikka Aasai
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement