கேசை வாபஸ் வாங்க விஜயா போட்ட கண்டிஷன், ஷாக்கில் உறைந்த அண்ணாமலை- சிறகடிக்க ஆசை

0
160
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சத்யா வீடியோவால் மீனா வீட்டில் கலவரம் வெடித்தது. ரோகினி பயங்கர சந்தோஷத்தில் இருக்கிறார். முத்து, மீனா குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கிறார். இதை அறிந்த போலீஸ், சத்யாவை கைது செய்ய பார்க்கிறது. சத்யா இங்கிருந்தால் பாதுகாப்பில்லை என்று தன்னுடைய நண்பர் செல்வம் வீட்டில் தங்க வைத்தார் முத்து. அதற்குப்பின் வீட்டிற்கு வந்த மீனாவை உள்ளே விடாமல் பயங்கர கலவரமே செய்தார் விஜயா. முத்து, தன்னுடைய அப்பாவிடம் சத்யா பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்லியும், அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை.

-விளம்பரம்-

அந்த சமயம் வந்த போலீஸ் இடம் சத்யா மீது விஜயா கம்பளைண்ட் கொடுத்தார். பின் மீனா வீட்டை விட்டு வெளியே போகணும் என்று விஜயா சொன்னதற்கு அண்ணாமலை முடியாது என்றார். உடனே கோபத்தில் விஜயா வீட்டை விட்டு வெளியே வந்து பார்வதி வீட்டில் தங்கி இருக்கிறார். இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய மாமியார் வீட்டை விட்டு போனதை நினைத்து வருத்தப்பட்டு முத்துவிடம் பேசிக் கொண்டிருந்தார். அதற்கு முத்துவும் சமாதானம் செய்தார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

பின் மீனாவின் அம்மாவை போலீஸ் கைது செய்து விட்டதாக போன் வந்து மீனா-முத்து பதறி அடித்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போனார்கள். அங்கு சத்யா வந்தால் தான் அவருடைய அம்மாவை விடுவேன் என்று போலீஸ் சொன்னதால், என்ன செய்வது என்று புரியாமல் மீனா,சீதா அழுது புலம்பி இருந்தார்கள். நேற்று எபிசோட்டில், எப்படியோ கெஞ்சி கூத்தாடி மீனாவின் அம்மாவை முத்து வெளியில் கூட்டிட்டு வந்தார். ஆனால், சத்யா வரவில்லை என்றால் மீனா அம்மா மீது தான் கேஸ் எழுதுவோம் என்று போலீஸ் மிரட்டி அனுப்பினார்கள்.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் சிட்டி, ரோகினிக்கு போன் செய்து அவசரமாக வர சொன்னார். அப்போது சிட்டி, நாங்கள் அடித்த அடியில் இவன் நெஞ்சை பிடித்து விழுந்து விட்டான். செத்துப் போயிட்டானா? போலீஸ் கேஸ் ஆகிவிடும். உங்கள் பெயரை தான் சொல்லுவேன். அதெல்லாம் வேண்டாம் என்றால் அவனுக்கு மருத்துவ செலவுக்கு 2 லட்சம் கொடுங்கள் என்று சொல்ல, பிஏ நிலைமையை பார்த்து ரோகினியும் பணத்தை ரெடி பண்ணுகிறேன் என்று கிளம்பி விட்டார். ஆனால், பிஏவிற்கு ஒன்றுமே ஆகவில்லை. இருவருமே சேர்ந்து ரோகினி இடம் பணத்தைப் பறிக்க திட்டம் போட்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் முத்து, வக்கீலை பார்த்து நடந்ததை சொன்னார். அவர், இதற்கு ஒரே வழி கம்ப்ளைன்ட் கொடுத்தவர் வாபஸ் வாங்கிவிட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் , கேஸ் நடத்த நிறைய செலவாகும் என்று சொன்னார். பின் மீனா-முத்து இருவருமே வீட்டிற்கு வந்து அண்ணாமலையிடம் நடந்ததை சொல்லி எடுத்து புரிய வைத்தார்கள். அண்ணாமலையும் மனமிரங்கி விஜயாவிடம் பேச அவர் இருக்கும் இடத்திற்கு போனார்.

சீரியல் ப்ரோமோ:

அண்ணாமலையை பார்த்துடன் விஜயா மனதிற்குள் ரொம்ப சந்தோஷப்பட்டார். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அண்ணாமலை, சத்யாவை வெளியில் எடுக்க கேஸை வாபஸ் வாங்க சொல்லி விஜயாவிடம் பேசுகிறார். ஆனால், விஜயா முடியாது என்று மறுக்கிறார். அண்ணாமலை கெஞ்சி கேட்டதற்கு விஜயா, முத்து-மீனா வீட்டை விட்டு வெளியே போனால் சத்யா மீது கொடுத்த கம்ப்ளைன்ட்டை வாபஸ் வாங்குகிறேன் என்று சொல்கிறார். உடனே அண்ணாமலை, அது முடியாது. இந்த பிடிவாதம் வாழ்க்கைக்கு நல்லதில்லை என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

Advertisement