சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் சிறகடிக்க ஆசை ஒன்று. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் டிஆர்பியில் டாப்பில் இருக்கிறது. இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகினியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா.

உண்மையில் அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. சீரியலில் கடந்த வாரம் மனோஜ் கடையில் பெரிய ஆர்டர் வந்ததால் லட்சக்கணக்கில் பொருள்களை விற்று விடுகிறார். ஆனால், அவர்கள் கொடுத்த பணம் கள்ளப்பணம் என்று தெரிந்தது. அதையும் ஏமாற்றி விடுகிறார்கள். இதை விஜயாவிடம் சொல்லி அழுகிறார். பின் விஜயாவும் மீனாவின் நகையை கொடுக்க, மனோஜ் அடமானம் வைக்காமல் விற்று விடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் முத்து பாட்டிக்கு கிபிட் வாங்க, மீனா உடைய நகையை கொடுங்கள் என்று அண்ணாமலை இடம் கேட்கிறார்.
சிறக்கடிக்க ஆசை :
அண்ணாமலை, விஜயாவிடம் பேசி நகையை வாங்கி கொடுக்கிறார். ஆனால், கவரிங் நகையை தான் மனோஜ் ரெடி பண்ணி தன்னுடைய அம்மாவிடம் கொடுத்தார். யாருக்கும் அந்த உண்மை தெரியாது. அந்த நகையை மீனாவும் நகைக்கடையில் காண்பிக்கிறார்கள். அது கவரிங் என்று தெரிந்தவுடன் அதிர்ச்சி ஆகிறார்கள். பாட்டி, தன் பிறந்தநாளை சந்தோசமாக கொண்டாடட்டும் அதற்கு பின் கேட்கலாம் என்று சத்தியம் வாங்கி கொள்கிறார் மீனா. ஆனால், அது மனோஜ் வேலை தான் என்று முத்து கண்டுபிடித்து விடுகிறார். என்னுடைய பிறந்தநாளுக்கு மனதிற்கு பிடித்த பரிசு யார் கொடுக்கிறீர்களோ? அவர்களுக்கு நான் ஒரு கிப்ட் தரப்போகிறேன் என்று பாட்டி சொல்கிறார்.

பாட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்:
இதனால் ஒவ்வொருவரும் பாட்டியை சந்தோஷப்படுத்த நினைத்தார்கள். அண்ணாமலை வீட்டிற்கு இரண்டு ஐய்யர்களை கூட்டிட்டு வந்து கோயிலில் சாமிக்கு படைத்த புடவையை கொடுத்து சப்ரைஸ் கொடுக்கிறார். பின் பாட்டியிடம் எல்லோரும் ஜோடி ஜோடியாக ஆசிர்வாதம் வாங்குகிறார்கள். ஆனால், முத்து இல்லாமல் மீனா தனியாக நிற்கிறார். பின் ஸ்ருதியின் அம்மா மீனா நகையை பார்த்து, இது கவரிங் தானே, உன் புருஷன் உனக்கு தங்கத்தில் ஒரு நகையை கூட வாங்கி வைக்கவில்லையா? என்று கிண்டலாக பேசுகிறார். பாட்டியும், அண்ணாமலையும் சுருதி அம்மாவை திட்டுகிறார்கள்.
பாட்டிக்கு கொடுத்த கிப்ட்:
மேலும், நேற்று எபிசோட்டில், மனோஜ் பாட்டிற்கு தங்க சயின், ரோகினியும் தங்கத்தில் கிப்ட், ஸ்ருதி செல்போன், ஸ்ருதியின் அம்மா நகை, விஜயா டிவி, மீனாவின் அம்மா புடவை வாங்கி தந்திருக்கிறார்கள். கடைசியில் முத்து வந்து நிற்கிறார். அவர் தன் பாட்டிக்காக அவருடைய பள்ளி நண்பர்களை அழைத்து வந்திருந்தார் . அதை பார்த்தவுடன் பாட்டி சந்தோசத்தில் அழுகிறார். பின் அவர்களுடன் பாட்டி பழைய நினைவுகளை பேசி மகிழ்கிறார். அதற்குப் பின் கேக் வெட்டி சந்தோசமாக கொண்டாடுகிறார்கள். இந்த நிலையில் இன்றைய எபிசோடில், எல்லோருமே எனக்கு சிறப்பாக பரிசு கொடுத்து இருக்கிறீர்கள். ஆனால், என்னுடைய மனதை குளிர வைத்தது முத்து-மீனா தான்.

முத்துவுக்கு கிடைத்த பரிசு:
இவர்களுக்கு என்னிடம் இருக்கும் பழைய விலைமதிப்பற்ற நகையை கொடுக்கிறேன். இதனால் மற்றவர்களுக்கெல்லாம் பயங்கரமான கோபம் வருகிறது. அடுத்த நாள் பாட்டி ஊருக்கு சென்ற பின் முத்து தன்னிடம் இருந்த கவரிங் நகை விஷயத்தை அண்ணாமலை இடம் சொல்கிறார். அண்ணாமலை, என்ன விஜயா? என்று கேட்டவுடன் எனக்கு என்ன தெரியும், கல்யாணத்தின்போது பீரோவில் வைத்த நகை. மீனா தான் சொல்லணும். மீனா வீட்டில் தான் ஏதோ கோல்மால் பண்ணி இருக்கிறார்கள் என்று சொல்ல எல்லாருமே அதிர்ச்சியாக நிற்கிறார்கள். இனிவரும் நாட்களில் கவரிங் நகை உண்மை வெளிவருமா? மனோஜ்- விஜயா மாட்டிக் கொள்வார்களா? இதில் மீனா தரப்பு நியாயம் வெளிவருமா? போன்ற பரபரப்பாக சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.






