அட, சிறுத்தை பாவுஜியின் மனைவி இந்த பிரபல நடிகை தானா ? இவங்களுக்கு இவ்ளோ பெரிய மகன் மற்றும் மகளா.

0
6028
Avilash
- Advertisement -

சிறுத்தை பட வில்லன் பாவுஜியின் மனைவி புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும் இவர்கள் தான் பாவுஜி மனைவியா! என்று ஆச்சர்யத்துடன் கேட்டு வருகின்றனர். கன்னட மொழியில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக அவினாஷ் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் கன்னட மொழியில் பல படங்களில் நடித்துள்ளார். பின் இவர் தமிழில் பி வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றியைத் தந்த சந்திரமுகி படத்தில் ராமச்சந்திர ஆச்சாரி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

-விளம்பரம்-

இந்த படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. சந்திரமுகி படத்தை தொடர்ந்து இவர் சிவா இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சிறுத்தை படத்தில் பாவுஜி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த கதாபாத்திரத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. பின் தமிழில் இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது இவரின் மனைவி புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்து பலரும் இந்த க்யூட்டான நடிகையா! இவருடைய மனைவி என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். அது வேற யாரும் இல்லைங்க நடிகை மாளவிகா தான். இவர் மாதவனின் ஜேஜே படத்தில் ஜமுனாவின் சகோதரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஆறு, டிஸ்யூம், ஆதி, கள்வனின் காதலி, ஜெயம் கொண்டான், வந்தான் வென்றான் போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதற்கு பிறகு இவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். இவர் பல சீரியல்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் அவினாஷ் மற்றும் மாளவிகா இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்து பலரும் ஆச்சரியத்துடன் இவருக்கு இவ்வளவு கியூட்டான மனைவியா! என்று கேட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement