யார் இந்த கங்குவன் ? அப்படி என்றால் என்ன ? சிறுத்தை சிவா அளித்த பேட்டி.

0
2160
- Advertisement -

கங்குவான் படத்தின் டைட்டில் குறித்து இயக்குனர் சிவா அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற படம் வெளியாகி இருந்தது. அதன் பின் சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற ரோலில் நடித்து இருந்தார். அதேபோல் மாதவனின் ராக்கெட்டரி தி நம்பி விளைவு என்ற படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இப்படி இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும் சூர்யாவின் 24 வது படமான சூரரைப் போற்று 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை வென்று குவித்துள்ளது.

- Advertisement -

சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணி

இதனால் பலரும் சூர்யாவிற்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்கள். தற்போது சூர்யா அவர்கள் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். முதன் முறையாக சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு கங்குவா என்று பெயர் இடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை யூவி கிரியேஷன் நிறுவனமும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.

படம் குறித்த தகவல்:

இவர்களுடன் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படம் 3டில் உருவாக இருப்பதாக படக்குழு கூறி இருக்கின்றனர். அதோடு இந்த படம் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் வகையில் எடுக்கப்படுகிறது.

-விளம்பரம்-

படத்தின் கிளிம்ஸ் வீடியோ:

இந்த படம் 10 மொழிகளில் வெளியாகயிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் ஐந்து விதமான கெட்டப்பில் நடிக்கிறார். தற்போது கங்குவா படத்தின் கிளிம்ஸ் வீடியோவை சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கங்குவா படத்தின் டைட்டில் குறித்து இயக்குனர் சிவா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார் .அதில் அவர், சூர்யா சாருடன் பணி புரிந்தது ஒரு சிறப்பான அனுபவம். அவர் சிறந்த நடிகர், சிறந்த மனிதர்.

டைட்டில் குறித்து சொன்னது:

உண்மையில் கங்குவன் என்பது ஒரு மொழி. படத்தின் போஸ்டரில் கங்குவன் என்ற பெயருக்கு மேலே இடம் பெற்றுள்ள எழுத்தானது வட்ட எழுத்து என்று அழைக்கப்படும். இது பழங்கால தமிழ். மூன்றாம் நூற்றாண்டிற்கு பிறகு வழக்கத்தில் இந்த மொழி இருந்தது. மேலும், கங்குவன் என்றால் நெருப்பு என்று பொருள். கங்குவான் என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என்பதுதான் அர்த்தம். கங்குவான் திரைப்படத்தை நாங்கள் பத்து மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம் என்று கூறியிருந்தார் .

Advertisement