'விஸ்வாசம்' படத்தை போல மனைவி மற்றும் மகளை பிரிந்து வாழ்ந்து வந்த 'வீரம்' பட நடிகருக்கு ரகசிய இரண்டாம் திருமணம்.

By Rajkumar · 5/9/2021

பிரபல இயக்குனரான சிறுத்தை சிவாவின் தம்பியும் நடிகருமான பாலா ரகசியமாக இரண்டாம் திருமணத்தை முடித்துள்ளார். நடிகர் பாலா அவர்கள் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த அன்பு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர். பின் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்து உள்ளார். பின் சில காலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிய அளவு இல்லை என்றவுடன் மலையாள மொழிக்கு சென்று விட்டார்.

'வீரம்' படத்தில் அஜித் தம்பிகளில் ஒருவராக நடித்தார். இந்த படத்தை இயக்கிய சிறுத்தை சிவா தான் இவருடைய அண்ணன். நடிகர் பாலா கேரளாவை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி அம்ருதாவை ரொம்ப காலமாக காதலித்து வந்தார். பின்னர் இவர்கள் இருவரும் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு அவந்திகா என்ற ஒரு மகள் இருக்கிறார்.இவர்களுடைய மணவாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருக்கும் போது அம்ருதா தனியாக இசைக்குழு ஆரம்பித்த பின்னர் தான் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிய வந்தது.

இதையும் பாருங்க : பிளாட்டாக மாறிய நிலத்தை வாங்கி விவசாய நிலமாக மாற்றிய நடிகை தேவயானி - குவியும் பாராட்டு.

சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டு அம்ருதா அவர்கள் அவருடைய தந்தை வீட்டிற்கு குழந்தையை அழைத்துக் கொண்டு சென்று விடுவாராம்.சில வருடங்களாகவே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. பின் 2015 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து வந்தார்கள்.இவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு போட்டார்கள். இந்த வழக்கில் இவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு விவாகரத்து கிடைத்தது.

இப்படி ஒரு நிலையில் கேரளாவை சேர்ந்த எலிசபெத் என்ற மருத்துவரை நடிகர் பாலா, ரகசியமாக இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகின. ஆனால், இதுகுறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் நடிகர் பாலா மவுனம் காத்து வந்தார். இந்நிலையில், அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 9)நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதன்மூலம் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டது உறுதியாகி உள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full