தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக ராம் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவருடைய இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பறந்து போ. இந்த படத்தில் மிர்ச்சி சிவா, கிரேஷ் ஆண்டனி, மிதுல் ராயன், அஞ்சலி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்கள். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் ஹீரோ சிவா அவர்கள் சென்னை சிட்லபாக்கம் ஏரியாவில் ஒரு அப்பார்ட்மெண்டில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி தான் கிரேஸ் ஆண்டனி. இவர்களுக்கு மிதுல் ராயன் என்ற ஒரு மகன் இருக்கிறார். இருவருமே காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர்கள். தன்னுடைய மகனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் சிவா. அதற்காகவே இவர் இஎம்ஐ வீடு, பைக் என்று எல்லாமே வாங்கி வைத்திருக்கிறார்.
அதோடு கடனை கட்ட முடியாமலும் ரொம்ப கஷ்டப்படுகிறார் சிவா. இவருடைய மனைவி கிரேஸ், சேலை வியாபாரம் செய்கிறார். இப்படி இருக்கும் போது ஒருநாள் கோயம்புத்தூரில் சேலை வியாபாரம் செய்ய கிரேஸ் ஆண்டனி செல்கிறார். பின் மிர்ச்சி சிவா தான் தன்னுடைய மகனை கவனமாக பார்த்துக் கொள்கிறார். அப்போது மிர்ச்சி சிவாவின் மகன் பைக்கில் ஊர் சுற்ற வேண்டும் என்று ரொம்பவே அடம் பிடிக்கிறார்.

இதனால் சிவாவுமே தன்னுடைய மகனை அலைத்துக்கொண்டு பைக் டிராவல் செய்கிறார். அப்படி செல்லும்போது சிவா, தன் பள்ளி தோழி அஞ்சலியை சந்திக்கிறார். மகன்- தந்தை இருவருமே பைக் டிராவல் செய்யும்போது நடக்கும் சுவாரசியமான சம்பவங்களும், இருவருக்கும் இடையேயான புரிதலும் தான் படத்தினுடைய மீதி கதை. இந்த படத்தில் நடிகர் சிவா அவர்கள் இதுவரை பார்த்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
படத்தை தன் தோளிலே சுமர்ந்து சென்றார் என்று சொல்லலாம். ஒரு குழந்தையின் ஆசையை தந்தை எப்படி நிறைவேற்றுவார் என்பதை மிர்ச்சி சிவா சிறப்பாக செய்திருக்கிறார். இவரை அடுத்து வரும் கிரேஸ் ஆண்டனி தனக்கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அவருடைய பாடி லாங்குவேஜும் வசனங்களுமே நன்றாக இருக்கிறது. இவர்களுடைய மகனாக வரும் மிதுல் ராயன் சுட்டித்தனம் குறும்புக்கார பையனாக சிறப்பாக நடித்திருக்கிறார்.
இவர்களை அடுத்து படத்தில் வரும் நடிகை அஞ்சலியுமே தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாகவும் கச்சிதமாகவும் செய்து முடித்து இருக்கிறார். சின்ன ரோலாக இருந்தாலும் எல்லோரும் நினைவில் நிற்கும் வகையில் தன்னுடைய நடிப்பின் மூலம் அஞ்சலி காண்பித்து இருக்கிறார். எளிமையான கதையாக இருந்தாலும் அதை இயக்குனர் சொல்லி இருக்கும் விதம் நன்றாக இருக்கிறது. ஒரு தந்தை மகன் இடையான ஒரு புரிதலை அழகாக காண்பித்திருக்கிறார். அதோடு ஒரு பைக் ட்ராவலில் அவர்கள் சந்திக்கும்
சம்பவங்களை எல்லாம் சிறப்பாகவும் காண்பித்திருக்கிறார்.

படத்தில் பெரிதாக ஆக்சன் காட்சிகள் இல்லை என்றாலும் ஒரு எதார்த்தமான மிடில் கிளாஸ் குடும்ப கதையை காண்பித்திருக்கிறார். பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. குடும்பம், குழந்தைகள், பரபரப்பான வாழ்க்கை, ஓட்டம் என்று ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையை கண்முன் காண்பித்திருக்கிறார்.கஷ்டத்திலும் வாழ்க்கையினுடைய சந்தோஷங்களை அனுபவிக்க வேண்டும் என்ற மெசேஜையும் சொல்லி இருக்கிறார். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக இருக்கிறது.
நிறை:
கதைக்களம்
மிர்ச்சி சிவா நடிப்பு அருமை
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்
மிடில்கிளாஸ் வாழ்க்கை

குறை:
ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கதை பொறுமையாகவே செல்கிறது
கொஞ்சம் சுவாரசியம் கொடுத்து இருக்கலாம்
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
மொத்தத்தில் பறந்து போ - வேகம் குறைவு






