இன்றைய நிலைக்கு புதியதாக ஒரு படம் ரிலீஸ் ஆகிறது என்றால் அந்த படத்தை ஆர்வமாக கண்டு களிப்பவர்களுக்கு மத்தியில் படம் எங்கிருந்து காப்பி அடிக்கப்பட்டது அந்த படத்தில் உள்ள சீன்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று ட்ரோல் செய்யும் மீம் கிரியேட்டர்கள், நெட்டிசன்கள் என்று இப்படியும் ஒரு கூட்டம் திரைப்படத்தை காண வருகிறார்கள் இதெல்லாம் நாகரிகம் என்ற பெயரில் வளர்ந்து வந்ந சமூக வலைதளங்கள் இருப்பதால் சாத்தியமாகிறது. இதெல்லாம் சாத்தியமற்ற காலகட்டங்களில் வேறு மொழி படத்தை தமிழில் தழுவி எடுக்கப்பட்ட படத்தை பற்றி இன்று காண்போம்

அமர தீபம்:-

கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீதர் தயாரிப்பில் தெலுங்கு பட இயக்குனர் டி பிரகாஷ் ராவ் இயக்கத்தில் டீ சலபதி ராவ் ஜி ராமநாதன் ஜி என் பாலசுப்பிரமணியம் இவர்களின் இசையமைப்பில் சிவாஜி கணேசன் பத்மினி சாவித்திரி நம்பியார் இவர்கள் நடித்து அன்றைய காலகட்டத்தில் வித்தியாசமான கதைகளத்துடன் செப்டம்பர் 29 1956 ல் வெளிவந்த படமே அமர தீபம் அந்த நாட்களில் இப்படம் பெரும் வெற்றி படமாக அமைந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

Advertisement

படத்தின் கதை :

அமரதீபம் படத்தின் கதை 1942 இல் வெளியான ரான்டம் ஹார்வஸ்ட் ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டது. இதே பெயரில் ஜேம்ஸ் ஹில்டன் எழுதிய நாவலை தழுவி ஹாலிவுட் படத்தை எடுத்திருந்தனர்.இந்தப் படம் என்ற ஆங்கில மொழி படத்தை தமிழாக்கம் செய்து தமிழ் மக்களுக்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்ட படம் என்று இன்று வரை பலருக்கும் தெரியாத உண்மை. இந்தப் படத்தில் சாவித்திரி பணக்கார வீட்டு பெண்ணாக நடித்திருப்பார். சாவித்திரியின் பெற்றோர்கள் நம்பியாரை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்துவார்கள்.

அனைவரிடத்திலும் அதிகார தோரணையில் நடந்து கொள்ளும் நம்பியார் மீது விருப்பம் இல்லாத காரணத்தினால் வீட்டை விட்டு வெளியேறுகிறார் சாவித்திரி. பின்னர் சிவாஜி கணேசன் உதவி செய்து வருவார் இந்த நிலையில் சிவாஜி கணேசன் மீது சாவித்திரி காதல் வயப்படுகிறார் தலையில் பலத்த காயம் படும் சிவாஜி கணேசன் பழைய நினைவுகளை இழக்கிறார் பின்பு நாடோடி கூட்டத்தில் வாழும் பத்மினியை காதலிக்கிறார் சிவாஜி கணேசனின் பழைய நினைவு திரும்புமா அவர் சாவித்திரையை சந்திப்பாரா கடைசியில் யாரை திருமணம் செய்து கொள்வார் இதுதான் அமர தீபம் படத்தின் கதைக்கலாம்.

Advertisement

இந்தியில் ரீ மேக் :

இந்த படம் 1958 ஆம் ஆண்டு அமர் தீப் என்ற பெயரில் சிவாஜி ப்ரொடக்ஷனில் கீழ் டி.பிரகாஷ் ராவ் இயக்கத்தில் தேவ் ஆனந்த் வைஜயந்திமாலா ,பத்மினி ,ராகினி ,ஜானிவாக்கர் ,பிரான், ஓம் பிரகாஷ் ஆகியோர் நடித்து இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்ட காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் இல்லாத காரணத்தினால் காபி கேட் , காபி மேக்கர் என்ற பட்டப் பெயர்கள் சூட்டப்படாமல் இருந்திருப்பார்கள் போல .

Advertisement
Advertisement