தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியை யாராலும் மறக்க முடியாது. இவர் 1952ல் பராசக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருந்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 288 படங்களுக்கும் மேல் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இன்றும் இவருடைய நடிப்புக்கு யாருமே நிகர் இல்லை என்று தான் சொல்லணும். இவருக்கு சாந்தி, தேன்மொழி என்ற இரண்டு மகள்களும், பிரபு, ராம்குமார் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.

சிவாஜி கணேசனின் மூத்த புதல்வர் ராம் குமார் இலங்கையில் யாழ்பாணம் அருகில் முலாய் என்ற கிராமத்திற்கு கடந்த ஏப்ரல் 24ந் தேதி சென்று இருந்தார். காரணம்? தனது தந்தை ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் நிதி சேகரித்துத் தந்ததால் உருவான மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலினால்.இன்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன்னர் – 1953ம் ஆண்டு அக்டோபர் 28ந் தேதி, மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக சிவாஜி கணேசன் யாழ்ப்பாணம் நகரசபை மண்டபத்தில் “என் தங்கை” என்ற நாடகத்தை நடத்தி நிதிசேகரித்துக் கொடுத்திருந்தார்.

Advertisement

அதே நாடகம் கொழும்பிலும் நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் சிவாஜி ஒரு இளம் நடிகர். சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி ‘ 1952 ஒக்டோபரில் வெளியானது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து முனைவர் மருதுமோகன் எழுதிய புத்தகத்தின் யாழ்ப்பாண வெளியீட்டுக்காக இங்கிலாந்தில் வசிக்கும் ஈழத்தமிழரான முனைவர் சிவா பிள்ளையின் அழைப்பின்பேரில் ‘சென்னை-யாழ்ப்பாணம்’ பயணிகள் விமானத்தில் பலாலிக்குப் சென்றார் ராம் குமார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டார். சென்னை திரும்பமுன்னர் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கும் அவர் சென்றார். வைத்தியசாலையின் நிர்வாகிகள், வைத்தியர்கள், தாதிமார் இணைந்து அவரை, வரவேற்றிருக்கிறார்கள். அந்த அன்பான உபசரிப்புக் கண்டு மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறார் ‘சிவாஜியின் மூத்த செல்வன்’ ராம்குமார்

Advertisement

யாழ்ப்பாணத்தின் ஒரு சில பகுதிகளையும் சுற்றிப் பார்த்திருக்கிறார் ராம் குமார். நல்லூர் கந்தசாமி கோவிலுள் கண்கள் குளமாகி அழுதேவிட்டார் தொல்புரம் மன்னதோட்டம் ஜெகஜோதி அம்பாள் ஆலயம், பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயம், கீரிமலை.. செல்வச்சந்நதி.. மாவிட்டபுரம்.. வல்வெட்டித்துறைமுத்துமாரியம்மன் திருவிழாக் கோலாகலம்.. என ஒருபுறமும், யாழ் கோட்டை, இந்தியா அன்பளித்த கலாச்சார மண்டபம், யாழ் நூல்நிலையம்… பருத்தித்துறை முனை, சங்கிலியன்தோப்பு, மந்திரிமனை என பட்டியல் நீள்கிறது.

Advertisement

தேசமும் தெய்வீகமும் அவரைக் கவர்ந்துவிட்டிருக்கின்றன. தனது தந்தையின் கையால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் நட்டு வைக்கப்பட்டிருந்த மாமரத்தை கண்டபோது கடுமையாக உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார் ராம்குமார்!! ‘தேவர் மகன்’ அல்லவா.. “விதை நான் போட்டது.. இதெல்லாம் என்ன பெருமையா? கடமை..!”

Advertisement