அதற்கு அஜித் பெண்ணாக மாற வேண்டும்.! சிவகார்த்திகேயன் பட நடிகை சொன்ன பதில்.!

By Rajkumar · 28/5/2019

தமிழ் சினிமாவில் இந்த வயதிலும் மிக ஹாண்ட்சம் நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவருக்கு இந்த வயதிலும் பல பெண் ரசிகைகள் இருக்கின்றனர். பல நடிகைகள் அஜித்தை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூட பல பேட்டிகளில் கூறியுள்ளனர். இந்த நிலையில் அஜித் ஒருநாள் பெண்ணாக மாற வேண்டும் என்று சிவகார்த்திகேயன் பட நடிகை கூறியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த 'வறுத்தப்படாத வாலிபர் சங்கம்' என்ற படம் மாபெரும் ரசிகர்கள் மத்தியில் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு தொழியாக படம் முழுவதும் அவருடன் நடித்தவரின் பெயர் ஷாலு சம்மு.

இதையும் பாருங்க : தெலுங்கு நடிகர் நாணிக்கு ஸ்ரீரெட்டி சமர்ப்பித்த படுக்கை வீடியோ.!

மேலும் அந்த படத்திற்கு பின்னர் நகுல் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான 'தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்' என்ற படத்தில் காமெடி நடிகர் சதீஸின் காதலியாக நடித்திருந்தார். இந்த இரு படத்திலும் கிராமத்து குயிளாக நடித்திருந்தார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர்'ஒரு வேலை நீங்கள் அழகிய ஆணாக மாறினால் சினிமா துறையில் யாரை டேட் செய்வீர்கள்' என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஷாலினி ' அதற்கு அஜித் ஒரு நாள் பெண்ணாக மாற வேண்டும் என்று ஆசைப்படுவேன் 'என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full