Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
A2 4
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.11.02பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

குருவையே மிஞ்சிய சிவகார்த்திகேயன்- அமரன் செய்த வசூல் சாதனை, இத்தன கோடியா

எழுதியவர்subhashini2 நவம்பர், 2024 அன்று 12:41 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சிவகார்த்திகேயனின் அமரன் படம் செய்து இருக்கும் வசூல் சாதனை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த ‘அயலான்’ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

குருவையே மிஞ்சிய சிவகார்த்திகேயன்-  அமரன் செய்த வசூல் சாதனை, இத்தன கோடியா

அதைத்தொடர்ந்து தற்போது இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அமரன்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது. மேலும், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார்.

அமரன் படம்:

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் முகுந்தனாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்திருக்கிறார். இப்படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ராணுவத்தில் இணைய வேண்டும் என்கிற ஆசை எப்படி வந்தது. அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகள் என்ன? இதற்கு இடையே, மேஜர் முகுந்த் வரதராஜனுக்கும் அவரது மனைவி இந்துவுக்கும் காதல் மலர்ந்தது எப்படி? ராணுவத்தில் முகுந்த் செய்த சாகசங்கள் என்ன? காஷ்மீரில் ஏன் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள் தான் ‘அமரன்’ படத்தின் கதை.

குருவையே மிஞ்சிய சிவகார்த்திகேயன்-  அமரன் செய்த வசூல் சாதனை, இத்தன கோடியா

படம் குறித்த தகவல்:

படத்தில் நடை, உடை, பாவனை, கட்டு மஸ்தான உடம்பு என்று ராணுவ வீரர் முகுந்தின் ஒட்டுமொத்த உருவமாக, இதுவரை நாம் பார்க்காத சிவகார்த்திகேயனை இயக்குனர் ராஜ்குமார் காட்டியிருக்கிறார். நடிகை சாய் பல்லவியும், இந்து கதாபாத்திரத்தில் மேஜர் முகுந்த் மீது இந்து வைத்திருந்த அளவற்ற காதல், ஆத்மார்த்தமான அன்பு என்று பின்னி பெடல் எடுத்து இருக்கிறார். தீபாவளிக்கு வெளியான இப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். அதோடு முதல்வர் ஸ்டாலினும் படத்தை பார்த்து படகுழுவினரை பாராட்டி இருந்தார்.

குருவையே மிஞ்சிய சிவகார்த்திகேயன்-  அமரன் செய்த வசூல் சாதனை, இத்தன கோடியா

வசூல் குறித்த விவரம்:

மேலும், பிரபலங்கள் பலரும் அமரன் படத்தை பார்த்து பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் அமரன் செய்து இருக்கும் வசூல் சாதனை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அமரன் படம் வெளியாகி முதல் நாளில் உலக அளவில் 42.3 கோடி வசூல் செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமே 16.5 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அமரன் படம் ரிலீஸ் ஆன அன்று ஜெயம் ரவியின் பிரதர், கவினின் பிளடி பெக்கர் போன்ற படங்கள் வெளியாகியிருக்கிறது. ஆனால், இந்த படங்கள் எதுவுமே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வசூல் சாதனை செய்யவில்லை. ஆனால், சிவகார்த்திகேயனின் அமரன் படம் தான் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்து வருகிறது.

குருவையே மிஞ்சிய சிவகார்த்திகேயன்-  அமரன் செய்த வசூல் சாதனை, இத்தன கோடியா

சிவகார்த்திகேயன்- தனுஷ்:

இது ஒரு பக்கம் இருக்க, சிவகார்த்திகேயன்- தனுஷ் ரசிகர்கள் இடையை எப்போதுமே ஒரு மோதல் இருந்து கொண்டு தான் இருக்கு. எந்த ஒரு விழா, படம் ரிலீஸ் என்றாலும் இந்த இரண்டு நடிகர்கள் ரசிகர்கள் இடையே மோதல் வெடிக்கும். இந்த ஆண்டு பொங்கலின்போது கூட தனுஷினுடைய கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் அயலான் படம் வெளியாகி மிகப் பெரிய அளவில் வரவேற்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் தனுஷ் இயக்கி நடித்திருந்த ராயன் படம் நல்ல வசூல் சாதனையும் வரவேற்பையும் பெற்றிருந்தது. அதோடு 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருந்ததாக கூறப்பட்டது. அந்த வகையில் அமரன் படமும் இனிவரும் நாட்களிலும் மிகப்பெரிய அளவில் வசூல் வசூல் சாதனை செய்யும் என்று கூறப்படுகிறது.

தலைப்புகள்
#amaran collection#Amaran#அமரன்#Amaran Review#அமரன் வசூல்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement