ரஜினிக்கு முன்பே சிவராஜ்குமாருடன் நடித்துள்ள சிவகார்த்திகேயன் – வைரலாகும் வீடியோ இதோ.

0
374
- Advertisement -

சிவராஜ்குமார் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருக்கும் வீடியோ தான் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கன்னட மொழியில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சிவராஜ்குமார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான படம். இந்த திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி தான் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், ஸ்வேதா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார். உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படம் முதல் வாரத்தின் முடிவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக கலெக்ஷன் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சிவராஜ்குமார் படம்:

மேலும், சிவராஜின் கேமியோ ரோலால் ஜெயிலர் திரைப்படத்தை கன்னட ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். கன்னடத்தில் தற்போது ஜெயிலர் திரைப்படம் இந்த அளவிற்கு வரவேற்பை பெற காரணம் இவர் தான். மாஸான கதாபாத்திரத்தில் ஷிவராஜ்குமாரின் நடிப்பு பலரை கவர்ந்து இருக்கிறது. அதிலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி மற்றும் மோகன் லாலும் மாஸ் காட்டிய நிலையில் இவர் சர்வ சாதாரனமாக ஒரு tissue paper டாப்பாவை கையில் ஒரு வந்து கிளைமாக்ஸ் காட்சியில் கலக்கி இருப்பார்.

வைரலாகும் வீடியோ:

இவரது நடிப்பை கன்னட ரசிங்கர்கள் பாராட்டுவது ஆச்சரியமல்ல தமிழ் ரசிகர்களும் இவரது நடிப்பை பாராட்டி தள்ளி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் ஜெயிலர் படத்திற்கு பிறகு சிவராஜ்குமார் குறித்த செய்திகள் தான் சோசியல் மீடியாவில் அதிகமாக உலா வருகிறது. அந்த வகையில் சிவராஜ் குமாருடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடனமாடிருக்கும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. பொதுவாகவே, சிவகார்த்திகேயன் அவர்கள் பெரிதாக வேறொரு நடிகரின் படத்தில் கேமியோ ரோலில் நடித்ததில்லை.

-விளம்பரம்-

சிவராஜ்குமார் படத்தில் சிவகார்த்திகேயன்:

ஆனால், இவர் சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலத்தில் நடிகர் சிவராஜ் குமாரின் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் சிவராஜ்குமார் உடன் இணைந்து நடனம் ஆடுகிறார். அந்த வீடியோவை தான் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் வெறித்தனமாக பகிர்ந்து வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் சிவகார்த்திகேயன் ஒருவர். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் நுழைந்த இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் திரைப்பயணம்:

கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மாவீரன். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்திருந்தது. இதனை அடுத்து சிவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் அயலான். தற்போது இந்த படத்தின் ரிலீஸ் காண பணிகள் தான் மும்பரமாக நடைபெற்று இருக்கிறது. இதைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் எஸ் கே 21 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கமலஹாசன் தயாரிப்பு நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கிறது. இதனை அடுத்தும் இவர் சில படங்களில் கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement