சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர்

By ·
தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் நடிகர்களுள் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவர் நடித்தால் படம் நிச்சயம் ஓடிவிடும் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களிடம் வந்துவிட்டது என்றே கூறலாம்.   சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் பொன்ராம் கூட்டணியில் உறவான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய இரண்டு படங்களும் மெகா ஹிட் ஆனது நாம் அறிந்ததே. அதே கூட்டணி இன்னொரு படத்தையும் துவங்கி உள்ள நிலையில், அந்த படத்தின் தயாரிப்பாளர் பல டெக்னிஷன்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் மிகவும் சிறப்படுகிறாராம். லைட் மேனுக்கான பேட்டா கூட சரிவர கொடுப்பதில்லையாம். இதே பிரச்சனை ரஜினி முருகன் படப்பிடிப்பின்போதும் ஏற்பட்டதாம், அப்போது படமே ட்ரோப் ஆகும் நிலைக்கு சென்று, ஒரு வழியாக மீண்டும் படம் ரிலீஸ் ஆனதாம்.
Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை