‘தளபதி 65’ படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் – என்ன தெரியுமா ? எல்லாம் இவர் தான் காரணமா இருக்கும்.

0
1183
Vijay
- Advertisement -

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிங்கர், கம்மிடியன், மிமிக்கிரி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர். கடந்த 2019 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்த படம் குடும்ப கதை குறிப்பாக அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்திய படமாக இருந்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த படம் “ஹீரோ” படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

தற்போது நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்டர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயனின் 35வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கூட வெளியாகி இருந்தது.

இதையும் பாருங்க : இப்படி உடம்ப கொண்டு வர 2 வருஷம் ஆச்சி – படு கிளாமர் போசை கொடுத்த ரேஷ்மா. கண்ட மேனிக்கு வர்ணிக்கும் ரசிகர்கள்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய ‘செல்லம்மா’ மற்றும் ‘சோ பேபி ‘ ஆகிய இரண்டு பாடல்களுக்கு சிவகார்த்திகேயன் தான் லிரிக்ஸ் எழுதினார். இந்த இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஹிட் அடித்தது. இப்படி ஒரு நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் படத்திற்க்கு ஒரு பாடல் எழுத இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் தனது 65 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் தான் இயக்க இருக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ஒரு பாடலுக்கு சிவகார்த்திகேயன் தான் லிரிக்ஸ் எழுத இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement