தனுஷுக்கு தேசிய விருது அறிவிக்கும் முன்னரே கணித்த சிவகார்த்திகேயன் – என்ன ஓரு அதிசயம் பாருங்களேன்.

0
9358
dhanush
- Advertisement -

2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் தனுஷ் பெற்றுள்ளார். இந்தியாவில் ஆண்டு தோறும் தேசிய விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள தேசிய விருது பட்டியலில் பல்வேறு தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷூக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த திரைப்படமாக அசுரன் திரைப்படமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

அதே போல தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய்சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்த்திபன் இயக்கி தயாரித்து அவரே நடித்து கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஒத்த செருப்பு படத்துக்கு சிறப்பு விருது மற்றும் சிறந்த ஒலிக்கலவைக்காக ரசூல் பூக்குட்டிக்கு விருது என இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி, சூப்பர் டீலக்ஸ் பட இயக்குனருக்கும் படக்குழுவிற்கும் நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார். கேடி (எ) கருப்புதுரை’ படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது அறிவிக்கப்ட்டுள்ளது.

இன்று மாலை 4 மணி அளவில் தான் தேசிய விருது வென்ற பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால், 4 மணிக்கு முன்னரே 2019-ல் வெளிவந்த எந்த தமிழ் திரைப்படங்கள் விருதுகளை வெல்லும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? என்ற ட்வீட்டுக்கு நடிகர் சிவகார்த்திகேயன், அசுரன் தனுஷ் சார் என்று பதிவிட்டு இருந்தார். அவர் சொன்னது போலவே அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement